பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 ஆனந்த முதல் ஆனந்த வரை பெற்றுப் புறப்பட்டேன். கந்தசாமியார் அவர்களும் என் தலைமேல் கரம்வைத்து வாழ்த்தி வழியனுப்பினார்கள். அவர் களிடம் பெற்ற அந்த நல்ல பண்பு என் வாழ்வில் நன்கு எனக்குப் பயன்படுகிறது. என் வகுப்புப் படிப்பு அத்துடன் முடிவடைந்துவிட்டது. தேர்வின் முடிவில் அந்த வகுப்பில் நானே முதல்வனாகத் தேர்ந்தேன். என அறிந்தேன். எனினும் மேலே படிக்கச் செல்லவில்லை, பாரதியாரையோ மற்ற புலவர்களையோ நான் காணவும் இல்லை. ஊரில் இருந்துகொண்டு மேல் எப்படிப் பயில்வது என்று எண்ணமிட்டுக்கொண்டிருந்தேன். அதுகாலை நான் அதிகமாகக் கடிதம் எழுதும் வழக்கமும் கொள்ளவில்லை. பாரதியார் நான் படிக்காது விட்டது பற்றி என்ன சொல்லுவாரோ என்ற பயம் மட்டும் என் மனத்தில் ஊசலாடிக் கிடந்தது. எனினும் நான் கடிதம் எழுதவில்லை. - ஏறக்குறைய இரண்டாண்டுகள் கழித்துத் திருவண்ணா மலையில் சைவசித்தாந்த சமாச ஆண்டுவிழா நடைபெற்றது. அதற்குத் தலைவர் விபுலானந்த அடிகளார். பாரதியார் சொற்பொழிவும் அதில் இருந்தது. நான் இளைஞர் மாநாட்டில் பங்குகொள்ளச் சென்றிருந்தேன். இருபெரும் பேராசிரியர்களையும் ஒருசேரப் பார்க்கப்போகிறோம் என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருப்பினும் பாரதியார் என்ன சொல் வாரோ என்ற அதிர்ச்சி ஒருபுறம்என்னைத் தாக்கிற்று. மாநாடு தொடங்கச் சிறிதுநேரம் இருந்தது. இருவரும், இன்னும் சிலரும் உட்கார்ந்திருந்தனர். நான் அஞ்சி அஞ்சி அவர்கள் அருகில் சென்றேன். வணங்கினேன். பாரதியார் அவர்தம் கணிரென்ற குரலில் வீரனே வா' என்றார். நான் திகைத்தேன்-நையாண்டி செய்கிறாரா என எண்ணினேன். 'இவனைத் தெரியுமா?’ என்று அடிகளாரை அவர் கேட்டார். அவர் என் மாணவ ரன்றோ,’ என்ற பதில் அடிகளாரிட மிருந்து வந்தது. "ஆமாம் ஆமாம் மறந்துபோனேன்' என்று