பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 203 வந்த திரு.தணிகைராயன் (இன்றைய அண்ணா தணிகை அரசு);அவர்கள் அப்பொறுப்பில் ஒரளவு பங்குகொண்டார். நான் ஊருக்குப் போகாத நாட்களில் விடுதியில் தங்கி வேண்டிய உதவிகளைச் செய்து வந்தேன். விடுதியைப் புது இடத்துக்கு மாற்றத் திட்டமிட்டார் களே ஒழிய, என்று மாற்றுவது என அவர்கள் முடிவு செய்ய வில்லை. நான் ஒரு நல்ல நாள் பார்த்து, அன்று விடுதிக் காப்பாளராகிய தனிகைராயருடன் சென்று அந்தப் புதிய இடத்தைச் சுத்தம் செய்து, ஸ்டவ் மூட்டி உப்புமாவு கிண்டி, பால் காய்ச்சி வந்திருந்த அனைவருக்கும் கொடுத்தேன். அந்த நாளே இன்றைய பரந்த இடத்தின் பள்ளியின் கால் கோள் விழா ஆற்றிய நாளாகும். செய்துவிட்டேனே ஒழிய, அப்பாவும் மற்றவரும் என்ன சொல்வாரோ என்ற அச்சம் என் உள்ளத்தில் இருந்தது. அன்றோ மறுநாளோ அவர்கள் வந்தபோது, மெல்ல புது வீட்டிற்குச் சென்று பால் காய்ச்சிப் பலகாரம் செய்து சாப்பிட்டு நல்ல நாள் கொண்டதைக் குறித்தேன். இருவரும் மிகவும் மகிழ்ந்தார்கள். அன்றே அந்த இடத்தை முழுதும் பார்வையிட்டு, மறுநாளே எல்லா மாணவர்களையும் அப்புது இடத்துக்குப் புகுமாறு பணித் தார்கள். அவர்தம் அன்பின் திறனை அப்போது என்னால் உணர முடிந்தது. - ஓராண்டு இந்துமத பாடசாலையில் வேலை செய்த போது பல அறிஞர்கள் எனக்கு அறிமுகமானார்கள் என்றேன். அவருள் இன்று ஐதராபாத்தில் இருக்கும் திரு. மணி. கோடீஸ்வர முதலியார் ஒருவர். அவர் அதுகாலை சென்னை கோவிந்த நாயகர் இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தார். செயலாற்றலும் பேச்சுத் திறனும் பெற்றவராக விளங்கினார். அவர் அடிக்கடி பள்ளிக்கு வருவார்-அப்பாவின் உறவினரும் ஆவர். அவர் வரும்போதெல்லாம் என்னை மேலே பயிலுமாறு ஊக்குவார்.