பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை . - 21 | சென்றதோ, கடிதம் எழுதியதோ ஒன்றும் அவர்கட்குத் தெரியாது. அக்கடிதத்தை மிகப் பாதுகாவலாக ஒரு உள் அறையில் வைத்துப் பூட்டினேன். எனினும் ஒரிரு ஆண்டுகள் கழித்து நானே அதுபற்றி மறந்திருந்தவேளையில், வேறு எதையோ தேடிய அன்னையார் கையில் அக்கடிதம் சிக்கியது. நான் அப்போது ஊரில் இல்லை. என் கையெழுத்தோடு கூடிய அவர்கள் பெயரொடு உறையிட்ட-தபால், முத்திரை யும் பெற்ற அக்கடிதம் அவர்களுக்குப் படிக்கவேண்டும் என்ற அவாவைத் தூண்டிற்று. ஒரு சில வரிகள் படித்ததும் கண்ணிர் வடித்தார்கள் போலும். அந்த வேளையில் மாணிக்கம் என்ற நண்பர் என் வீட்டிற்குவர அவரிடம் கொடுத்து அதைப் படிக்கச் சொன்னார்கள். அவர் படிக்கப் படிக்க அன்னை யார் அலறல் அதிகமாயிற்று. அதை முடித்த அவர் மேலுள்ள தேதியைப் பார்த்து-தபால் முத்திரைத் தேதியைப் பார்த்து, அது எப்பொழுதோ எழுதப்பெற்றது என்பதையும் அப்போது, அதுபற்றிக் கவலைப்படத் தேவை யில்லை என்பதையும் விளக்கியும் அன்னையார் ஆறுதல் பெற வில்லை. நான் வீடு திரும்பிய பிறகு அதை என்னிடம் கொடுத்து அதன் காரணம் என்னவென்று கேட்டார்கள். நான் ஊமையானேன். பதிலுக்குக் கண்ணிரைப் பெருக் கினேன். எனவே மேலும் ஒன்றும் கேட்க வேண்டாம் என்ற நிலையில் என்னை விட்டுச் சென்றனர். நான் அக்கடிதம் மேலும் அங்கிருந்தால் இன்னும் தொல்லைகள் விளையலாம் என்ற எண்ணத்தில் அதைக் கிழித்தெறிந்தேன். அக் கடிதத்தைப் படித்த் மாணிக்கம் என் மாமியார் வீட்டுக்கார்ர். இந்த நிகழ்ச்சியை அவர்களிடம் அங்கேசென்று சொன்ன போதும். அவர்கள் எப்போதும் போலக் கேலியும் கிண்டலும் செய்து மகிழ்ந்தார்கள் என அறிந்தேன். இதுவோ எனை ஆளுமாறு என இறைவனை எண்ணி அமைந்தேன். நாளும் மெல்லக் கழிந்து கொண்டே இருந்தது.