பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 ஆனந்த முதல் ஆனந்த வரை வேண்டும் என்பதும் அன்னையாருடைய அசைக்க முடியாத நம்பிக்கை-அப்படியே வாழ்ந்தும் வந்தனர். . மற்றொரு நிகழ்ச்சியும் நிழலிடுகின்றது. என் நண்பர் கள்-காளப்பர் உட்பட என் மைத்துனரை இளையனார் வேலூர் கோயிலுக்கு அறக் காப்பாளராக்க வேண்டுமென முயன்றனர்-முயன்று வெற்றியும் பெற்றனர். முதலில் அது பற்றி என்னிடம் சொன்னால் நான் ஒருவேளை மறுத்து விடுவேனோ என்ற அச்சத்தால் யாரும் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் எல்லாம் முடிந்து அவரும் பதவி ஏற்ற பிறகே காளப்பர் என்னிடம் கூறினார்-நான் சீறி னேன். என் மைத்துனர் பதவி ஏற்கக் கூடாது என்பதல்ல என் வாதம். பொதுவாகச் சிவன்கோயில் அறக்காப்பாளர் வேலைக்கே நம்மவர்-நல்லவர் யாவரும் செல்லக் கூடாது என்பது என் கொள்கை. நான் காஞ்சியில் வாழ்ந்திருந்த போது, அறநிலையப் பொறுப்பாளராகப் பணியாற்றிய திரு. C. M. இராமச்சந்திரஞ் செட்டியார் அவர்கள் என்னை வற்புறுத்தி ஏகாம்பரநாதர்கோயில் அறக்காப்பாளராக்க முயன்றார். என் தீவிர எதிர்ப்பினாலேயே அது நின்றது. அப்படியே நான் சென்னை வந்த பிறகும் அமைந்தகரை ஏகாம்பரநாதர் கோயிலுக்குத் திரு. சண்முக முதலியாரின் முயற்சியால் என்னை அறக்காப்பாளராக நியமித்து ஆணை யும் வந்தது. வந்த மறுநாளே நான் அதை மறுத்து எழுதி விட்டேன். எங்களுர்க் கோயிலைச் செம்மைப்படுத்த வேண்டுமென ஒவ்வொரு இந்து சமய அறநிலைய ஆணை யாளரை வேண்டும் போதும், அவர்கள் நான் ஏன் அறக் காப்பாளராக இருக்கக்கூடாது என்றே கேட்பார். நான் அதற்குத்தக்க பதில் அளித்துத் தப்பித்துக்கொள்வேன். இவ்வாறு என்றும் சிவன்கோயில் அறக்காப்பாளர் பதவி வேண்டாம் என்பது என் எண்ணம். இந்த எண்ணத்தை ஊட்டியவர் என் அன்னையும் பாட்டனாரும் ஆவார். நம்