பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 23. சொல்லுவது வழக்கம். இப்படி எத்தனையோ கதைகள். ஆம் தாத்தா இறந்து மறைந்து விட்டார்கள். அவர் நினைவை மறக்காது வாழவைக்கும் இக்கிளிக் கதையும் அதன் வழி அவர் சொல்லிச் சென்ற நீதியும் எனக்கு இன்றும் முன் நின்றுகொண்டிருக்கின்றன. அவர்கள் சொன்ன அந்த இரண்டு நீதிகள்-பெரியவர்கள் பேச்சைக் கேட்டு நடத்தலும், கூடிவாழ்தலும்-அன்றைக்கு மட்டுமின்றி இன்றைக்கும் என்றைக்கும் தேவையான நீதிகளாகவே உள்ளதை அறியா தார் யார்! என் தாத்தாவின் நினைவைச் சாகாமல் வாழ வைக்கும் அக்கிளிக்கதையும் நீதிகளும் நெடுங்காலம் வாழ்க என வாழ்த்துகின்றேன். 2. பாட்டியின் அறிவுரை என் தாயார் என்னைப் பெற்ற கடன் ஒன்றைத்தான் அறிவார். வளர்த்தவர் என் பாட்டி காமாட்சி அம்மாள் தான். பாட்டி என்றால் தாயைப்பெற்ற பாட்டியோ தந்தையைப் பெற்ற பாட்டியோ அல்லர். மேலே கண்ட என் தாத்தாவின் உடன்பிறந்த என் அம்மாவின் அத்தையாகிய பாட்டியாவர். அவர்கள் இளமையிலேயே கணவனை இழந்து எங்கள் பாட்டனாருடைய குடும்பத்தோடு குடும்பமாக ஒன்றி விட்டவர்கள். அக்குடும்பத்தில் பலநாட்க்ள் ஆண் குழந்தை யில்லாது நான் பிறந்தமையின் அவர்களுக்கெல்லாம் ஒரே மகிழ்ச்சி. அதிலும் பாட்டி எப்போதும் என்னைச் சீராட்டிக் கொண்டே இருப்பாளாம். தாத்தா இறந்தபிறகு இந்தப் பாட்டியுடன்தான் பெரும்பாலும் இருப்பேன். நான் பள்ளிக் கூடம் போகும் வேளை தவிரப் பெரும்பாலும் அவர்களோடு தோட்டங்களுக்குச் செல்வேன். அவர்கள் விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து வீட்டு வேலைகளைச் செய்து