பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 ஆனந்த முதல் ஆனந்த வரை ஒருமுறை அவர் நண்பர் எழுதிய இயேசுவின் வரலாற் றைத் திருத்தித்தருமாறு எனக்குப் பணித்தார். அது பாவால் ஆயது; நடையும் நன்கு அமைந்திருந்தது; அதைக் கண்டு திருத்தித் தந்தேன். அவர் பயிலுவதற்கும் இத்தகைய பணிகளைச் செய்வதற்கும் அவ்வப்போது நான் மறுத்தாலும் கேட்காது ஊதியம் தந்துவிடுவார். நானும் அதனால் எனக்குத் தேவையான நூல்களைப் பெற்றுக் கொள்வேன். அவர்களோடு பழகிய காரணத்தால் நானும் அடிக்கடி கிறித்தவக்கோயிலுக்குச் செல்லுதல் வழக்கமாயிற்று. அங்கு அவர்களோடு நானும் வணங்குவேன். ஆயினும் அங்கேயும் என் ஆறுமுகனே காட்சி தருவான். இயேசுவின் வாழ்வினைப் பற்றிப் பத்துப் பாடல்கள் பாடி, அதை அப்போது வந்த 'தமிழ்க்கலையில் வெளியிட்டேன். எத்தனைச் சமயங்களில் புகுந்து தேடினும் காணப்பெறும் ஈசன் ஒருவனே என்ற உண்மை எனககு அப்போது புலனாகும். அந்த அடிப்படை யிலே கிறித்து பிறந்த நாள், கிறித்தவ ஆண்டுப் பிறப்பு முதலியவற்றையும் அவர்களைப் போன்று நான் வீட்டில் கொண்டாடுவதுண்டு. கிறித்தவ ஆண்டு முதல்நாளில் தேவார திருவாசகங்களைப் படித்து, அவற்றுள் நூலிட்டுத் தெளிவேன். அப்படி ஒராண்டு தெளிந்து பெற்ற விளைவை உடன் பின்னே காட்ட இருக்கின்றேன். இவ்வாறு கிறித்தவ அன்பர்தம் உறவால் அவர்தம் சமய நெறியை நன்கு கற்றுக் கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றேன். அப்படியே எனக்கு மகமதிய நண்பர் இரண்டொருவரும் அமைந்தனர். பெரிய காஞ்சிபுரத்தில் நகை வாணிபம் செய்து வந்த பாட்சா என்பவரும், எங்கள் பள்ளியிலேயே உருது ஆசிரியராக இருந்த அன்பரும் உற்ற நண்பர்களாக இருந்தனர். அவர்களுடன் அவர்தம் சமயம் பற்றி ஆராய்வேன். திரு. பாட்சா என்பவர் பெரிய காஞ்சி மசூதி ஆட்சிப் பொறுப்பில் முக்கியப் பங்கு கொண்டவர். எனவே அவருடன் பலமுறை அந்த மசூதியில்,