பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 267 அவர் தரும் தாள்களையும் நூல்களையும் கிழித்து அவர் தலையிலேயே போடுவார்கள். அவர் புன்சிரிப்போடு அதை ஏற்றுக்கொள்வார். சில வேளைகளில் தண்ணிரைக் குடம் குடமாக அவர் தலையில் ஊற்றுவர்; அதனால் அவர் பணியில் தளர்ச்சி அடைந்தது கிடையாது. ஒருமுறை சாணி'யைக் கரைத்து அவர் தலையில் ஊற்றினர்; அவர் வாய் இயேசுவே, அவர்கள் அறியாது செய்யும் பிழைகளை மன்னியும்’ என்று வேண்டிற்று. இவ்வாறு அவர்தம் அன்புப் பணி இனிது நடைபெற்றது. நான் அவருடன் சில நாட்கள் பேசுவதுண்டு. ஒருசிலவற்றில் மாறுபட்டாலும் எல்லாச் சமய அடிப்படை உண்மைகளும் ஒனறே என்பதை அவர் ஏற்றுக்கொள்வார். அவர் அன்பளிப்பாகத் தந்த மரப் பெட்டியை (பீரோ) காஞ்சியில் இருந்தவரை வைத்துக் கொண்டிருந்தேன். பிறகு சென்னைக்கு எடுத்துவர இயலாத நிலையில் நண்பருக்குத் தந்து வந்தேன். அவர் வயதானவர்; எனவே தாய்நாடு திரும்பிச் சென் றார். பின் அவருக்குப் பதிலாக இளம் தம்பதிகள் அந்தப் பணியினைச் செய்யக் காஞ்சிபுரம் வந்தனர். நியுபிகின்' என்ற பெயருடைய அவர் வருகை காஞ்சிக் கிறித்தவ உலகுக்குப் புதுத் தொடக்கமாகவே இருந்தது. அந்த "நியுபிகின் அவர்கள் பிறகு சென்னைச் திருச்சபையின் தலைவராக ஆனார். அவர் வந்த போது தமிழ் அறியாத வராக இருந்தார். என்னிடம் தமிழ் பயில வேண்டும் என விரும்பினார். வாரத்தில் மூன்று நாட்கள் அவர் என் வீட்டிற்கு வருவார். மொழிபெயர்க்கும் வகையிலும் தமிழ் எழுத்தினைப் பயிலும் வகையிலும் அவர் வாதிடுவார். விரைவில் நன்கு தமிழைக் கற்றுக் கொண்டார். அவர்தம் துணைவியாரும் தமிழ் பயில விரும்பினர்; ஆயினும் விரைந்து கற்றுக் கொள்ளவில்லை. நியுபிகின்' மெல்ல மெல்லத் தமிழ்க் கூட்டங்களில் பேச ஆரம்பித்தார். அவர் உணர்ச்சியும் வேகமும் அவருக்குக் கைகொடுத்து உதவின.