பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 27 இப்படித் தோட்டங்களுக்கெல்லாம் ஏன் போகவேண்டும் என்றுமாத்திரம் கேட்பேன். பாட்டி சொன்ன பதில் ஒரு சிறிது என் நினைவுக்கு வருகிறது. பிள்ளையார் கத்தரித் தோட்டத்துக்கும் வெண்டைத் தோட்டத்துக்கும் ஏன் போக வேண்டும் என்பது மட்டும் எனக்குப் புதிராக இருந்தது. பாட்டி ஒருநாள் அதைப்பற்றிச் சொன்னார்கள் பிள்ளையார் இங்கெல்லாம் வரமாட்டார் என்று நினைக் காதே. அவர் எங்கும் இருக்கின்றவர். அவர் இங்கெல்லாம் களைபறித்து வேலை செய்கிறார் என்றால் அவரே செய் கின்றார் என்பது அல்ல. நம் போன்ற மக்களெல்லாம் இவ் வேலைகளைச் சோம்பல் இல்லாது ஒழுங்காகச் செய்கிறார் களா என்று அவர் மேலே பார்த்துக் கொண்டிருப்பார். சிலர் இது போலத் தோட்டங்களில் வேலை செய்வது இழிவு என்று நினைக்கிறார்கள். அது தவறு. உழவுத்தொழில்தான் எல்லாவற்றிலும் மேலானது. இதைத் தவறாது ஒழுங்காகச் செய்கிறார்களா என்று அவர் சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டே மறைந்திருப்பார். அதனால்தான் எங்கும் யார் கண்ணுக்கும் அவர் தெரிவதில்லை. ஆகவே நாம் எந்த வேலை செய்தாலும் மனநிறைவுடன் தவறாது ஒழுங்காகச் செய்யவேண்டும் என்றார்கள். எனக்கு அவையெல்லாம் சரியா தப்பா-அவர் பார்க்கிறாரா இல்லையா-என்பது பற்றி எல்லாம் ஆராய்ச்சி செய்யத் தெரியாது. இவை மட்டும் தெரிந்தன. உழவுத் தொழில் சிறந்ததென்பதும் அதைச் செய்யத் தயங்கலாகாது என்பதும், எத்தனை சிறுமை வாய்ந்த தொழிலாயினும் அதைச் செய்யத் தயங்கலாகாது என்பதும், எத்தனை சிறுமை வாய்ந்த தொழிலாயினும் அதைச் செய்ய ஏற்றுக்கொண்டால் ஒழுங்காகச் செய்து முடிக்க வேண்டும் என்பதும் அப்படிச் செய்யாவிட்டால் கடவுள் தண்டிப்பார் என்பதும் அன்று என் மனத்தில் பதிந்து விட்டன. செய்யும் செயலைத் திறம்பட ஒழுங்காகச் செய்பவன்தானே மனிதன்.