பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ஆனந்த முதல் ஆனந்த வரை இங்கே பாட்டியின் மற்றொரு பாட்டும் நினைவுக்கு வருகிறது. வெந்நீர் வளாவிவைத்தேன் விசிப்பலகை போட்டு N- - வைத்தேன் கோட்டைக்குப் போன ராசா வீடுவந்து சேரலியே மாட்டின் குவளையிலே மாண்டானோ என் கணவன் சேற்றின் குவளையிலே சேர்ந்தானோ என் கணவன் நாலுகாலும் தொங்கத் தொங்க நடுவயிறு கொத்தக் கொத்தப் போனாரோ என்கணவன் பொன்னு ரதத்து மேலே' என்ற பாட்டு இன்னும் முடியாமல் சென்றுகொண்டே இருக் கிறது. ஆனால் இதுவரைதான் இன்று எனக்கு நினைவு இருக்கிறது. ஒரு பெண் தவளை வெளியே சென்ற ஆண் தவளை திரும்பிவராத வருத்தத்தில் பாடிய பாட்டாம் இது. தவளை பேசுமா? எனக்குச் சிரிப்பு வரும். பாட்டி அதற்கு உரை சொல்லுவார். ஆண் தவளை வந்தால் குளிக்க வெந் நீரும் விசிப்பலகையும் போட்டு வைத்ததாம். ஆனாலும் ஆண் தவளை வரவில்லை. அது மாண்டுவிட்டதாக முடிவு கட்டிவிட்டது பெண். கோட்டைக்குப் போயிற்றாம். வரும் வழியில் என்ன ஆபத்தோ தெரியவில்லை என்கிறது. மாடு கள் மிதித்துக் கொன்றுவிட்டனவோ, சேற்றுக் குவளையிலே சிக்கி மாண்டதோ, அல்லது பொன்னு ரத"மாகிய காக்கை காலையும் வயிற்றையும் கொத்திக் கொத்தி ஆகாயத்தில் தூக்கிச் சென்றதோ என்று பெண் தவளை வருந்துகின்றதாம். உயரப் பறப்பதைப் பொன்னுரதமாகச் சொல்லுகிறது. பொன் இரதத்தில் நல்லவர் ஏறிப் பொன் உலகம் செல்வார் கள். ஆதலால், 'பாட்டி அந்தத் தவளைப் பாட்டெல்லாம் நமக்கு எதற்கு என்பேன் நான். . பாட்டி சாவதானமாகச் சொல்லுவாள் : குழந்தாய் தவளை அப்படிப் பாடுமா? பாடாது. யாரோ பாடினார். நான் அதைக்கேட்டு உனக்குச் சொல்லுகிறேன். இது எதற்