பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 299 உன்னையும் சேர்க்க நான் விரும்பவில்லை. நீ டாக்டர் பட்டம் பெறுவதற்கும் மேலான தகுதிபெற்றிருக்கிறாய் அதுபோதும். எனவே நீ டாக்டர் பட்டம் பெறவேண்டாம்’ என்றனர். ஆம் 1948இல் அவர் சொல்லிய அந்தச் சொற்கள்தீர்க்கதரிசனம் - இன்று எவ்வளவு உண்மையாக உள்ளது என்பதை யாவரும் அறிவர். இந்து முதலிய நாளேடுகளில் இத்தகைய பட்டங்களின் அவலநிலை பற்றி வரும் கட்டுரை களை யாரும் இதுவரை மறுக்கவில்லையே. நான் சேர்ந்த மறுஆண்டே மோசூர் கந்தசாமி முதலியார் அவர்கள் ஓய்வுபெற, டாக்டர். மு.வ. துறைத் தலைவரானார். 1961இல் அவர் பல்கலைக் கழகத்திற்குச் சென்ற பின்பு என்னைத் துறைத் தலைவனாக நியமித்தனர். இடையில் 1958-59இல் மதுரைப் பல்கலைக் கழகம் தொடங்குவதன்முன் னோடியாக, சென்னைப் பல்கலைக் கழகச் சார்பில் அங்கே முதுகலை தொடங்கப் பெற்ற தியாகராசர் கல்லூரியில் துறைத் தலைவனாகச் சென்றேன். பின்பு 1966-67இல் தமிழக அரசு அனுப்ப, ஐதராபாத் உஸ்மானியப் பல்கலைக் கழகத்தின் துறைத்தலைவனாக ஓராண்டு இருந்தேன். மற்ற ஆண்டுகளில் எல்லாம், என் அறுபத்திரண்டாம் ஆண்டுவரை பச்சையப்பரிலேயே பணியாற்றி ஓய்வு பெற்றேன். முப்பது ஆண்டு-அன்றைய என் ஆயுளில் பாதிப் பொழுதைக் கழித்த அப்பச்சையப்பருடன் கலந்த வாழ்வு நினைத்து நினைத்துப் போற்றுதற்குரியது. ஒரு சிலவற்றை இங்கே சுட்டிக்காட்டலாம் என எண்ணுகிறேன்.