பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 ஆனந்த முதல் ஆனந்த வரை (Military) யைச் சேர்ந்த நான்கைந்து வண்டிகள் வேகமாக எங்களைத் தாண்டிச் சென்றன. (அப்பகுதியில் எப்பொழுதும் அவர்கள் அதிகமாக உள்ளமையின் அதை நாங்கள் பெரிதாக எண்ணவில்லை). ஆனால் அந்த மிலிடரி லாரிகளில் ஒன்று திடீரென எங்கள் அருகில் வந்து நின்றது. அதிலிருந்து நான்கு ஐந்துபேர் அவர்தம் உடையுடன் இறங்கி எங்களை நோக்கி வந்தனர். அருகில் வந்து அவர்தம் முறைப்படி மரியாதை செலுத்தினர். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்களே பேசினர் ஐயா! நாங்கள் பச்சையப்பன் கல்லூரியில் பயின்ற மாணவர்கள். உங்களிடம் சிறப்புத் தமிழ் பயிலவில்லை யாயினும், உங்கள் நினைவு எங்கள் உள்ளத்தில் எப்போதும் இருக்கும். இன்று எதிர்பாராது உங்களை இங்கே கண்டமை யின் மகிழ்ந்து எங்கள் வணக்கத்தைத் தெரிவிக்கவே வந்தோம்' என்று கூறினர். பிறகு நாங்கள் இருவரும் அவர்கள் பயின்ற வகுப்புகள், பாடங்கள், அவர்தம் ஊர் முதலியவற்றையும் அன்றைய அவர்கள் வாழ்க்கையைப் பற்றியும் பேசினோம். பின் அவர்கள் நாங்கள் இருக்கும் இடம், அறை எண் இவற்றைக் கேட்டார்கள். நாங்கள் கொடுத்தோம். அவர்கள் சென்று விட்டார்கள். ஆனால் மறுநாள் காலை 5 மணி அளவில் (அங்கே மே மாதத்தில் காலை 5 மணிக்கு சூரியன். புறப்பட்டு விடுவான்). எங்கள் அறைக்கதவை அழுத்தமாகத் தட்டின ஓசை கேட்டு எழுந்து கதவைத் திறந்தோம். ஆம்! அப்பச்சையப்பரின் பழைய மாணவர் நின்றிருந்தனர். ஒரு கூடையில் நிறைய இட்டலி மற்றொன்றில் தோசை, வடை, உடன் சட்னி, சாம்பார் போன்ற நம் ஊர் காலை உணவுக்குரிய அனைத்தையும் வரிசையாக வைத்திருந்தனர். நாங்கள் ஒன்றும் பேச வில்லை-திகைத்தோம். அவர்கள் 'ஐயா, இங்கேயெல்லாம் நம்நாட்டுக் காலை உணவு கிடைக்காது; எங்கள் மிலிடரி விடுதியில் அளவற்று உள்ளது. எனவே உங்களுக்கெனவே