பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 327 கடந்து இதை எழுதுவதால் பலருடைய பெயர்கள் மறந்து விட்டன. சுந்தரர் திருத்தொண்டர் தொகையில் கூறியபடி 'அப்பாலும் அடி சார்ந்தார்' என அவர்களையும் எண்ணி எண்ணிப் போற்றக் கடமைப்பட்டவனாவேன். இவ்வாறு பல வகையில் அவர்களோடு பழகிய என்னை, நான் கல்லூரியை விட்டு வந்த போதிலும், கோடையில் அவர்தம் கொடைக்கானல் மாளிகைக்கு விரும்பி வரச் சொல்லுவார்கள். மூன்று ஆண்டுகள் அவ்வாறு சென்று அவர்தம் விருந்தினர் மாளிகையில் தங்கி அவர்களோடு உண்டு, கோடைகாலத்தினையெல்லாம் கண்டு களித்தேன். பகல் வேளைகளில் ஒவ்வோராண்டு ஒவ்வோர் இலக்கியத்தை முறையாகச் சொல்லுமாறு பலரும் கூடி அமர்ந்து கேட் பார்கள். இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு மேல் வகுப்பெனவே அவை நடைபெறும். சுந்தரம் செட்டியார் குடும்பமும் பக்கத்துப் பங்களாவில் இருந்த முன்னாள் தமிழக முதல்வர் குமாரசாமிராஜா அவர் தம் குடும்பத்தைச் சேர்ந்தோரும் முறையாக வகுப்பில் இருப்பார்கள். சில சமயம் வேறு சிலரும் வருவதுண்டு. ஒரிருமுறை கருமுத்துச் செட்டியார் தம் துணைவியார் திருமதி இராதா தியாகராசன் கூட வந்திருந்தார்கள் என எண்ணுகிறேன். - அழகு. சுந்தரம் செட்டியார் மூத்த மருகர்-அங்கே தனி மாளிகையில் தங்கியிருந்தவரும் அடிக்கடி வருவார். திரு. சுந்தரம் செட்டியார் மூத்த மகன் திரு. தியாகராசனும் அவர்தம் துணைவியாரும் தவறாது வந்து, கேட்டுச் சிந்தை திருந்திச் செம்மையுற்றனர் என்று திரு. சுந்தரம் செட்டியார் அவர்களும் அவர்தம் துணைவியார் ஆச்சி அவர்களும் என்னைக் காணும் போதெல்லாம் சொல்லுவார்கள். ஓராண்டு திருக்குறள் ஓராண்டு கம்பராமாயணம், ஒராண்டு பெரியபுராணம் என நினைக்கிறேன். இவ்வாறு மூன்று ஆண்டுகள் தொடர்ந்து கோடையில் ஒரு மாதத்துக்குமேல்