பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ஆனந்த முதல் ஆனந்த வரை என் பேரில். 'ஆஹா என்றது. அவனைப் பற்றிக் குறி சொல்லிப் பாடிற்று. கடைசியில் ஒரு குளிகை மருந்தைக் கொடுத்துக் குளத்தில் கரைக்கச் சொல்லிற்று. தெய்வம் பாடிய பாட்டு எப்படியோ இன்று மறந்துவிட்டது. குளிகை பெற்ற அர்ச்சுனன் குளக்கரையில் உட்கார்ந்து கொண்டு அல்லியின் தோழிப் பெண்கள் பக்கத்தில் இருப்பதையும் உணராமல் பாட்டுப் பாடிக் கொண்டே கரைக்கிறான். மெட்டு வழிநடைச் சிந்து மெட்டாம். வஞ்சிகுற மாதுதான் தந்த மாத்திரை தன்னை (நேர்த்தியாக வாகுடன் உறைக்கின்றேன் அந்த வண்ணமுளதொரு-அன்ன நடை அல்லி-தன்னிட மன (மிளகவில்லையே மட்டிலா மதுரை ராணியே-வந்துமே என்னை-சிங்தை - (மகிழ மாமணம் புரிய வா நீயே உந்தனை கினைந்தினிதாக-உல்லாசமாக-மெல்லியே (யானும் உறைக்கின்றேன் மருங்தை நேராக உற்றதோர் ஆவலைத் தீர்ப்பாயே-உற்பணமுள்ள- - (விற்பன மாதே உரிய நேசம் என்னைக் கொள்வாயே! என்று பாடுகிறான். பின் தோழியர் அவனை அல்லியிடம் அழைத்துச் செல்லுகிறார்கள். கடைசியில் கிருஷ்ணன் முயற்சியில் கலியாணம் நடக்கிறது. இந்த நாடகத்தைச் சுமார் நான்கு மணி நேரம் நடத்தி இருப்போம். ஒன்றுமில்லாத இந்தப் பாட்டுக்களைப் பாடும் போது ஊர் மக்கள் கைதட்டி எங்களை ஊக்குவித்தார்கள். இன்றைக்கும் பல சினிமாப் பாட்டுக்கள் இப்படித்தானே இருக்கின்றன. - நாடகம் முடியுமுன் ஒவ்வொரு நடிகருக்கும் மாலைகள் சூட்டிப் பரிசளித்தார்கள். வந்த இனிஸ்பெக்டரும்'