பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி 12+

அரவிந்தரை வற்புறுத்தினார். ஆனால், அரவிந்தர் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார்.

அரவிந்த கோஷ9க்கு இந்திய நாட்டின் துறவிகள் செய்து வந்த யோகத் கலை மீது ஒரு பற்று ஏற்பட்டது. அதனால் அவர், தியானமும், யோகசனங்களும் செய்து வந்தார். ஆன்மீகத் துறையில் அவர் ஈடுபட்டார்.

பாரத நாடு யோகக் கலையில் பற்று வைக்க வேண்டும். ஆன்மீகச் சிந்தனையையும் வளர்க்க வேண்டும். மக்கள் வாழ்க்கை யில் தியானம் செய்யும் சிந்தனைகள் மேலோங்க வேண்டும். இந்த மூன்று முறைகளும் இல்லாமல் இந்திய நாடு உயர்வு பெற முடியாது என்றும் அரவிந்தர் அந்தப் பத்திரிக்கையில் எழுதி வந்தார்.

இந்தியாவில் தனிமையிலிருந்து பல யோகிகள் சாதனை கள் புரிவதையும், அவர்களால் உலகத்துக்கு ஏற்படும் நன்மை களையும் அரவிந்தர் சிந்தித்தார். அதனால், யோகி களையும், ஆன்மீக நெறிகளை வளர்த்துவரும் மகான்களையும் நாடினார்.

நருமதை ஆற்றங்கரையில் ஒரு யோகி ஆசிரமம் அமைத்து யோகக் கலையைக் கற்றுக் கொடுப்பதாகக் கேள்விப் பட்ட அரவிந்தர், அவரைத் தேடிச் சென்று நேரில் பார்த்தார். அந்தச் சாதுவின் பெயர் பிரம்மானந்தர். அந்த மகானுக்கு அப்போது வயது இருநூற்றைம்பது என்று அங்குள்ள மக்கள் அவரிடம் கூறினார்கள். அவர் எப்போதும் தியானியாகவே இருப்பார். யாரிடமும் அவர் பேசமாட்டார் என்றார்கள்.

அந்தச் சாது எதிரிலே சென்று அரவிந்தர் அமர்ந்தார். கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்து கொண்டிருந்த அந்த ஞானி, கண் விழித்து அரவிந்தரையே வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரும் சாதுவைப் போலவே நீண்ட நேரம் தியானத்திலே திளைத்திருந்தார்.

அந்தச் சம்பவத்தைக் கண்ட அப்பகுதி மக்கள், அரவிந்தரைக் கண்டதும் ஞானி கண் விழித்துப் பார்த்ததால்,