பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 123

அரவிந்தர் ஒருமுறை பரோடவிலே இருந்து கொல்கத்தா நகர் வந்தார். அவருடைய நண்பர் ஒருவர் வீட்டுக்குச் சென்றார். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு, அரவிந்தர் அங்கே இருந்த தட்டச்சு இயந்திரத்தில், தனது ஒரு கட்டுரையைத் தட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு பெண் அறைக்குள்ளே வந்தாள்: அவளை அரவிந்தர் பார்த்தார் இருவர் கண்களும் பேசின. உடனே அவர், அந்தப் பெண்தான்் தனக்கு மனைவியாகக் கூடிய தகுதிப் பெற்றவள் என்ற முடிவுக்கு வந்தார். அந்தப் பெண் பழையபடி அறைக்குள்ளே சென்று தனது வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

தனது நண்பரிடம் அரவிந்தர் அந்தப் பெண் யாரென்றும் திருமணமாகி விட்டாதா என்றும் கேட்டார்.

அந்தப் பெண் தனக்கு உறவினர் என்றார் நண்பர். உடனே அரவிந்தர் நான் அவளைத் திருமணம் செய்ய விரும்பு கிறேன் என்றார். இதைக் கேட்ட நண்பர் அதிர்ச்சியடைந்தார்.

ஏதோ கேலியாக இவ்வாறு பேசுகிறார் என்று நண்பர் அரவிந்தரைப் பற்றி நினைத்து, அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் தரவில்லை. இதையறிந்த அவர் உண்மையாகத் தான்் சொல்கிறேன். நான் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றார்!

அப்போதும் அந்த நண்பர் தனக்குத் தான்ே சிரித்துக் கொண்டாரே தவிர, தக்க பதில் ஏதும் கூறாமலிருந்து விட்டார்.

உண்மையாகத்தான்் உரைக்கின்றேன் நண்பரே! நான் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுகிறேன் என்று, அரவிந்தர் பலமுறைக் கூறிய பின்புதான்் அந்த நண்பர் நம்பினார்.

அந்தப் பெண் பெயர் மிருணாளினி. வயது பதின்மூன்று.

அவ்வளவு உயரமும் - குள்ளமும் இல்லாத நடுத்தர உயரம் உடையவள். சற்று தடித்த உருவம்: வெண்ணிறமானவள்,