பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 143

அரசு அதிகாரிகள், விபின் சந்திர பாலரை அவர்களது வழக்குக்கு சாட்சிகளாக்கினார்கள். பாலரோ, சாட்சி கூற முடியாது' என்று மறுத்து விட்டார். இந்தக் காரணங்களால் அரவிந்தர் மீது போடப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படவில்லை; விடுதலையானார் அரவிந்தர். ஆனால், அச்சகர் மட்டும் ஆறுமாதம் தண்டனை பெற்றார்!

அரவிந்த கோஷ்மீது தொடரப்பட்ட இந்த வழக்கால், அச்சகர் பெற்ற தண்டனையால், வங்காளம் உணர்ச்சிப் புயலானது. கவிஞர் இரவீந்திரர் அரவிந்தர் மீது ஒரு வாழ்த்துப் 'பா' எழுதினார். அந்தக் கவிதைக்கு அரவிந்தருக்கு ரவீந்தரரின்

வணக்கம் என்பதே தலைப்பாகக் கொண்டு வெளியிடப் பட்டது.

வியின் சந்திர பாலர்தான்் வந்தே மாதரம் பத்திரிக்கை யின் முதல் ஆசிரியர் - அவரால் அந்த இதழை இரண்டரை மாதம் தான்் டத்த முடிந்தது. பிறகு 1906-ஆம் ஆண்டு முதல் 1908 அக்டோபர் மாதம் வரை இரண்டே காலாண்டுகள், ஆசிரியர் அரவிந்தர் என்ற பொறுப்பில் அந்த ஏடு வெளிவந்து கொண்டிருந்த போது, மக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, சுதந்திரம் என்ற லட்சியத்துக்குப் புரட்சிகரமான செல்வாக்கை அது உருவாக்கியது.

பிரிட்டிஷ் ஆட்சி தொடுத்த ராஜத் துரோகக் குற்ற வழக்கிலே இருந்து விடுதலைப் பெற்ற அரவிந்தர், பந்து தட்டத் தட்ட உயரமாக எழும் என்பதைப் போல, அரசியலில் மேலும் மேலும் அவர் தீவிரவாதியாகி விட்டார்.

தேசியக் காங்கிரசிலே இருந்த மிதவாதக் காங்கிரஸ் தலைவர்களுக்கு அரவிந்தருடைய தீவிரவாதம் பெரும் தலைவலியாகிக் கொண்டே இருந்தது.

இங்லிஷ்காரர்களுடன் கை குலுக்கிக் கொண்டு, அவர்கள் போடும் பதவி அல்லது சில சலுகைகள் என்ற பிச்சைகளை இருகையால் ஏந்திக் கொண்டு, மேலும் என்ன தேவைகளோ,