பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 163

அரவிந்தரும், மற்றும் சில வாலிபர்களும் விடுதலை பெற்றார்கள். மற்றும் சிலர் நாடு கடத்தப்பட்டார்கள்.

வழக்கு மன்றத்திலும், நீதிமன்றம் முன்பும் வெள்ளம் போலத் திரண்டிருந்த மக்கள் கூட்டம் வந்தே மாதரம்', பாரத் மாதாகிஜே என்று உற்சாக முழக்கங்களை எழுப்பியபடியே கலைந்து சென்றார்கள்.

'எதிர்காலமும்; கடல் கடந்த நாடுகளும் அரவிந்தரைப் பற்றிப் பேசும் என்று தேசபந்து சித்தரஞ்சன தாஸ் நீதி மன்றத்தில் குறிப்பிட்டதற்கேற்றவாறு, அரவிந்தர் 1909-ஆம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் நாள் சிறையிலே இருந்து விடுதறைறல பெற்று வெளியே வந்தார்.

அரவிந்தர் சிறை மீண்டு வெளியே வந்ததற்குப் பிறகு, அவரது வாழ்க்கையின் ஞானச் சுழற்சி எவ்வாறு சுழன்றது என்பதை, இந்த நூலின் ஆரம்பத்திலே அவரது மனமாறுதலும் - முடிவும் படித்தீர்கள்! நினைவுக்காக, மறுமுறையும் படிக்க விரும்பினால், அவரது ஆன்மீக ஞான வரலாற்றுச் சம்பவங்களை படித்துப் பாருங்கள். வாழ்வாங்கு வாழ்ந்த மனிதன் தெய்வமாகலாம் என்பதை உணர்வீர்கள்.