பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/172

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


170 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

இருக்கிறேன் பார் என்று ஊரறியக் காட்டிக் கொள்வதும்தான்் இன்றைய தர்மமாக இருக்கின்றது. இதை நான் விரும்பவில்லை.

கடவுள் என்று ஒருவர் இருந்தால், அதை அனுபவ வாயிலாக அறியவும், அவரை நேரில் தரிசனம் செய்யவும், ஏதாவது ஒரு வழி இருக்க வேண்டும். அது எளிதில் கடக்க முடியாத கொடிய வழியாக இருக்கலாம்.

ஆனாலும், அந்த வழியே செல்ல நான் உறுதி பூண்டு விட்டேன். நம் உடலுக்குள் நமக்குள்ளேயே அந்த வழி இருப்பதாய் இந்து தர்மம் சொல்கிறது. அந்த வழியே போவது எப்படி? என்றும் - வழிகாட்டி விதிகளை இயற்றியுள்ளார்கள்.

அந்த விதிகளை நான் கடைப்பிடிக்கத் துவங்கி விட்டேன். இந்து தர்மத்தின் கூற்று பொய்யல்ல என்பதை ஒரு மாதத்துக்குள்ளேயே தெரிந்து கொண்டேன். அந்த வழியில் உன்னையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது எனது விருப்பம்.

எனக்கு முற்றிலும் நிகராக நீ வர முடியாது. ஏனென்றால், உனக்கு அவ்வளவு தெளிவு கிடையாது. ஆனால், எனக்குப் பின்னால் நீ வருவதற்கு யாதொரு தடையுமில்லை. அவ் வழியே போவோர் அனைவருக்கும் வெற்றி கிடைப்பது உறுதி.

ஆனால், அந்த வழியே நீ வர உனக்கு விருப்பம் உன்னாலேதான்் வரவேண்டும். யாரும் உன்னை இழுத்துக் கொண்டு வரமுடியாது. நீ விரும்பினால் இதைப் பற்றி நான் மேலும் எழுதுவேன்.

மூன்றாவது பைத்தியம்

என்னுடைய மூன்றாவது பைத்தியம் என்ன என்பதைச் சொல்கிறேன். மற்றவர்கள் தாய்நாட்டை ஒரு ஜடப்