பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 471

பொருளாகவும், மைதான்மாகவும், வயலாகவும், காடாகவும், மலையாகவும், ஆறாகவும் நினைக்கிறார்கள்.

ஆனால், நான் எனது நாட்டைத் தாயாக மதிக்கிறேன். அவளிடம் பக்தி செலுத்துகிறேன்; வணங்குகிறேன்: மதிக்கிறேன். தாயின் மார்புமீது உட்கார்ந்து கொண்டு அரக்கன் ஒருவன் ரத்தம் குடிக்க முயல்வதைப் பார்க்கின்ற மகன் என்ன செய்கிறான்.

கவலை இல்லாமல் உண்டு, மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக இருப்பானா? அல்லது தாயைக் காப்பாற்ற விரைவானா? இழிந்துவிட்ட இந்த இனத்தை மேலுயர்த்தும் வலிமை எனக்கு இருப்பதை நான் அறிவேன்.

இங்கே உடல் வலிமையை நான் குறிப்பிடவில்லை. வாள் அல்லது துப்பாக்கி ஏந்திப் போராடுவதற்கு நான் புறப்பட வில்லை. அறிவு வலிமையையே நான் இங்கே குறிப்பிடுகிறேன்.

சத்திரிய பலம் மட்டுமே போதிய பலம் அன்று. பிரம்ம பலமும் பலமே. அந்தப் பலம் அறிவைத் துணைக் கொண்டது. இது ஒன்றும் புதிய கருத்தன்று. இன்றையக் கருத்துமல்ல; இந்தக் கருத்துடனேயே நான் பிறந்தேன். இக் கருத்து எனது நாடி நரம்புகளில் எல்லாம் நிறைந்துள்ளது. இந்த மாபெரும் விரதத்தை நிறைவேற்ற ஆண்டவன் என்னை இந்தப் பூமிக்கு அனுப்பி யுள்ளார்.

பதினான்காம் வயதில் இதன் வித்து முளைவிடத் தொடங்கியது; பதினெட்டாம் வயதில் இது நன்றாக வேரூன்றியது. உன்னுடைய நான்காவது அத்தை கூறிய வற்றை எல்லாம் கேட்டு, 'யாரோ ஜாதி கெட்டவன் என் அப்பாவிக் கணவரைத் தீய வழியில் அழைத்துச் சென்று விட்டான் என்று நீ நினைத்தாய்,