பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/178

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


20

அரவிந்த ஆசிரமம் - உலகம் காணா அற்புதமான ஆன்ம சோதனைச் சாலை!

அரவிந்தர் பெருமானின் மாபெரும், ஆன்மீகச் சோதனைச் சாலையையும், புதுவை மாநிலத்திலே உள்ள பாண்டிச்சேரி ஆசிரமத்தின் அற்புத யோக வாழ்க்கை நிலையம் ஆகும்.

இந்த ஆன்ம சோதனைக் கூடத்தில், அரவிந்தர் ஏறக் குறைய நாற்பதாண்டுக் காலமாகத் தனது ஆன்மீகச் சோதனை களைச் செய்து வந்தார்.

அந்தச் சோதனைகளை திருமதி மீரா அன்னையார் அரவிந்தருக்குப் பின்பு தொடர்ந்து செய்து வந்தார். இந்த ஆசிரமத்தில் நடைபெறும் யோகங்கள், சோதனைகள் யாவை? எவ்வாறு இயங்குகிறது இந்தச் சோதனைக் கூடம் என்பதைப் பார்ப்போம்.