பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

† 80 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

அவ்வாறு தங்களது உடைமைகளை அன்னையின் மலரடி களிலே ஒப்படைத்து விட்டவர்களுக்குரிய எல்லாப் பாதுகாப்பு வசதிகளையும், அன்னையே ஏற்றுக் கொள்கிறார். என்னென்ன தேவைகளோ, அவற்றை அவர்களுக்கு அன்னையே செய்கின்றார்.

சில நாட்கள் ஆசிரமத்தில் தங்கிவிட்டுப் போக வேண்டும் என்று எண்ணி வருபவர்கள், அவர்களது செலவினங்களை அவர்களே செய்து கொள்கிறார்கள்.

ஆசிரமத்திலே இப்போதுள்ள சாதகர்கள் எண்ணிக்கை ஏறக்குறைய ஆயிரத்து ஐநூறுக்கு மேலாக இருக்கிறார்கள். இவர்களுள் குழந்தைகள் முதல் வயோதிகர் வரை அடங்குவர்.

அரவிந்தரின் ஆன்மீக லட்சியத்தை முன்கூட்டியே உணர்ந்து, அதை ஏற்றுக் கொண்டவர்களே இங்கு சாதகர்களாக வருகிறார்கள். அதுபோலவே, இவர்கள் அனைவருக்கும் அன்னைதான்் வழிகாட்டியாவார்.

ஆசிரமத்திற்குள் வருகை தந்துள்ள ஒவ்வொரு சாதகரும், முழுமையாக முன்னேறுவதற்கும், வளர்ச்சி பெறுவதற்கும் தேவையான சூழ்நிலையை ஆசிரமம் ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொருவருடைய சுபாவங்களுக்கும், தனித் தன்மை களுக்கும் பொருத்தமான வழி காட்டப்படுகின்றது. ஒவ்வொரு சாதகரும் தமது உண்மை நிலையையும், அகநிலையையும் அறிந்து கொள்ள வேண்டும். அவரவர் ஆன்மாவோடு இசைய வேண்டும். ஆசிரம வாழ்க்கை முழுவதுமே இந்த உண்மையை மையப் புள்ளியாகக் கொண்டுதான்் நடந்து வருகிறது.

ஆசிரம வாழ்க்கையின் அடிப்படை ஆத்யாத்மிகம் என்ற மிகவும் சாதாரணக் கட்டுப்பாட்டினால்தான்் ஆசிரமவாசிகள் பிணைக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களுடைய தனித்