பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/187

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி 185

விஞ்ஞான முறையில் மாலிஷ் செய்து கொள்வதற்குரிய புதிய முறைக் கருவிகளும் அங்கே உள்ளன.

ரொட்டித் தயாரிக்கும் பேக்ரி ஆசிரமத்தில் இருக்கிறது. தேவைக்கேற்ப ரொட்டிகளை அவர்களே தயார் செய்து கொள்வார்கள். மாவரைக்கும் ஆலையும் இருக்கிறது.

விறகு, கரி போன்ற எரிபொருள்கள் தயாரிக்கும் பிரிவு ஆசிரமத்தில் உண்டு. சொந்தப் பண்ணை, பூந்தோட்டம், தென்னந்தோப்பு ஆகியவைகளும் அங்கே இருக்கின்றன. சாதகர்களே அந்த வேலைகளைச் செய்கிறார்கள்.

மாட்டுப் பண்ணை அங்கே இருக்கிறது. உயர் ஜாதி பசுக்கள் உள்ளன. தோட்டத்திலிருந்தும், தோப்பிலிருந்தும் ஆசிரமத்துக்குத் தேவையான காய் கனிவகைகள் கிடைக்கின்றன.

தோட்டத்தில் காலையில் பூ பறிக்கிறார்கள். பறித்தப் பூக்களை அன்னையின் திருவடிகளில் சூட்டி மகிழ்கிறார்கள். சாதகர்கள் தேவைக்கும் பூக்கள் வழங்குகிறார்கள். ஆசிரமத்துப் பணிகளில் பூக்களுக்குத்தான்் முதலிடம் தருகிறார்கள்.

தொழிற் கூடங்கள் பல ஆசிரமத்தில் இருக்கின்றன. அங்கு சாதகர்கள் அவற்றில் பயிற்சி பெறுகிறார்கள். இரும்புப் பட்டறை, உருக்குப் பட்டறை, எஞ்சினியரிங் பணிகள் முதலியன அங்கே நடக்கின்றன.

பழைய கடிதங்கள், துணிகள் பலவற்றிலிருந்து காகிதங்கள், அட்டைகள் செய்யும் பிரிவுகளும் இருக்கின்றன. எந்தப் பொருளையும் ஆசிரமத்தார்கள் வீணடிப்பதில்லை.

அங்கு வரும் அஞ்சலுறைகளைக் கிழித்து குறிப்புக்கள் எழுதும் சீட்டுகளாய் உபயோகம் செய்கிறார்கள். பயன்