பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 187

அந்த படம் எடுப்பவர்கள், அரவிந்தர், அன்னையின் உருவப் படங்களைத் தயாரிக்கிறார்கள். அவை மிகுந்த உயர்தரமாக இருக்கின்றன.

சித்திரக் கலைக்கென்று ஒரு தனிப்பிரிவு இருக்கிறது. இங்கு வரையப்பட்ட பல ஒவியங்களுக்கு உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் மதிப்புண்டு; நல்ல விலைக்கும் அவை விற்கின்றன.

ஆசிரமத்தில் வாய்ப்பாட்டு, வாத்திய இசை கற்கும் சாதகர்களும் உள்ளார்கள். கதக், கதகளி, மணிபுரி, பரத நாட்டியம் போன்ற நாட்டிய வகைக் கலைகளையும் பல சாதகர்கள் மகிழ்ச்சிப் பொங்கக் கற்று வருகிறார்கள்.

ஆசிரமத்துக்கென பாண்டு ஆர்க்கெஸ்ட்ரா எனப்படும் வாத்தியம் இசைப்போர் குழுக்கள் உள்ளன.

நூல்கள் வெளியிடும் பிரிவுகளும், ஆசிரமத்தில் இருக்கின்றன. இதுதான்் ஆசிரமத்திலே மிகப் பெரிய பிரிவு.

அரவிந்தர், அன்னை எழுதிய நூல்கள் பல மொழிகளில் இங்கே வெளியிடப்படுகின்றன. பல மொழிகளில் இருக்கும் அருமை யான நூல்களை இங்கே மொழி பெயர்த்து வெளியிடு கிறார்கள்.

அரவிந்த யோகம், சாதனை, தரிசனம், இலக்கியம் பற்றி ஆங்கிலம், வங்காளம், இந்தி, குஜராத்தி, கன்னடம், ஒரியா, தெலுங்கு போன்ற முக்கிய மொழிகளில் பத்திரிக்கைகள் வெளியிடப்படுகின்றன.

பள்ளி மாணவர்கள் பல மொழிகளில் அழகான கையெழுத்துப் பத்திரிக்கைகளை ஆசிரம வாசகர்களுக்காக நடத்துகிறார்கள்.

ஆசிரமத்தைப் பார்க்க ஆண்டு முழுவதும் சுற்றுலா பார்வையாளர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். இந்தப்