பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/190

From விக்கிமூலம்
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


† 38 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

பார்வையாளர்கள் தங்குவதற்கெனப் பல விருந்தகங்கள் இருக்கின்றன.

வாகனப் பகுதியில் ஜீப்களும், மோட்டார் கார்களும், டிரக்குகளும் இருக்கின்றன். ஆட்களையும், பொருட்களையும் ஏற்றிச் செல்ல அவை பயன்படுகின்றன.

வருகின்ற உள்நாட்டு, வெளிநாட்டுப் பார்வையாளர் களைத் தங்க வைத்து, வசதி செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு, செண்டிரல் பியூரோவைச் சேர்ந்தது. ஆசிரமத்துக்காகத் தனியான ஓர் அஞ்சலகம் உள்ளது.

ஆசிரமத்துள் மிக முக்கியமானது அகில உலகக் கல்வி நிலையம் என்ற பிரிவாகும். இந்தக் கல்வி நிலையம் என்ன செய் கின்றது என்பது எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரமாகும்.

சாதகர்கள் மூன்று விவரங்களில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். உடல் அல்லது மனநிலை, அறிவுநிலை, ஆத்மாவினது நிலை என்பதே அந்த மூன்று விவரங்கள்.

ஆசிரமத்தில் ஆத்யாத்மிகப் பலத்துக்குத்தான்் அதிக மதிப்பு தரப்படுகின்றது. சாதகர்களுக்கு அக அமைப்பு உருவாக, அன்னையின் அருள் உதவுகின்றது. அன்னையின் அருளாலேயே சாதகர்கள் தெய்வீக நாட்டம் உடையவர்களாக ஆகின்றார்கள்.

ஆசிரமம் எங்கும் அரவிந்தரின் சக்தி பரவியுள்ளது. ஆசிரமத்தின் அறிவு வளர்ச்சியும், பண்பாட்டு மேம்பாட்டுப் போக்கும், அழகுணர்ச்சியை வளர்க்கும் ஆர்வ விரைவும், இந்த அகில உலகக் கல்வி நிலையத்தில் எதிரொலிக்கின்றன.

பாரதத்தின் பழங்காலப் பண்பாடுகள் பற்றிய ஆராய்ச்சியும், ஆசிரமத்தில் நடக்கின்றது. குறிப்பாகச் சொல்