பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/192

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


490 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

கொண்டே வந்தன, இட்லர் வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்துக் கொண்டே வந்தான்்.

சூரியன் மறையாத ஒரு சாம்ராச்சிய நாடான இங்கிலாந்து நாடு முழுவதுமே அழிந்து கடலில் கரைந்து விடுமோ என்று அஞ்சுமாறு இட்லர் அந்த நாட்டைத் தாக்கிக் கொண்டிருந்தான்்.

அப்போது அரவிந்தர், பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே என்ற அருளுரைக்கேற்ப, இங்கிலாந்து நாட்டின் மேல் தமக்குள்ள ஆதரவைப் பகிரங்கமாக வெளியிட்டார். இந்திய மக்கள் போர் படையில் சேர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதே நேரத்தில் நேச நாடுகளுக்குத் தம்மால் முடிந்த பொருளுதவியையும் செய்தார். தம்முடைய ஆத்யாத்மிக சக்தி முழுவதையும் இங்கிலாந்து நாட்டின் வெற்றிக்காகவே ஈடு படுத்தினார்.

ஜெர்மன் படை தோல்வி முகத்திலே இறங்கி வந்தது. பிறகு இட்லர் என்ன ஆனான் என்பதை உலகமே கண்டு கொண்டது.

இட்லரின் நாஜி படை வலிமையை அரவிந்தர், அசுரர்கள் பலமாக எண்ணினார். உலக நன்மைக்காக அந்த அசுரன் அழிய வேண்டும், அழிக்கப்பட வேண்டும் என்பது அரவிந்தரது ஆத்மார்த்த முடிவு.

இரண்டாவது, உலகப் போர் நடந்துகொண்டிந்த நேரத்தில், சர் ஸ்டாப்ஃபோர்டு கிரிப்ஸ் என்பவர் தலைமையில் பிரிட்டிஷ் அமைச்சகப் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்தார்கள்.

அந்தக் குழு இந்திய மக்களுடன் ஒரு போர்க் கால சமரச உடன்பாடு செய்துகொள்ள முயன்றபோது, கிரிப்ஸ் திட்டத்தை