பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

昭 සූ 镑 چ۹عم சதது ஞானததல அன்னையின் தெய்வ ஒளி:

சிறுமி மீரா, கல்வியில் மட்டுமன்று, இசைத் துறையிலும் வல்லவரானார்! வாய்ப்பாட்டு இசைக் கருவிகள் இரண்டிலும் தேர்ச்சி பெற்றார்.

மேலை நாட்டுக் கருவிகளுள் ஒன்றான ஆர்கன் முன்பு சிறுமி மீரா அமர்ந்துக் கொண்டு மணிக் கணக்காக சாதகம் செய்வார். நேரம் போவதே தெரியாமல் மெய்மறந்து வாசிப்பாள்.

அவர் வாசிக்கும் ஆர்கன் ஒலியைக் கேட்டு வீதியில் போவோர் ஒவ்வொருவராக அவர் முன்பு வந்து அமர்வர். ஆர்கன் வித்தையைக் கேட்டு, ரசித்து அவர்கள் மகிழ்வார்கள்.

பள்ளிப் படிப்பை முடித்த பின்பு மீரா ஓவியம் வரையக் கற்றார். ஒரு நாளைக்கு பல மணி நேரங்கள் உழைப்பதில் அவர் சளைக்கமாட்டார்; களைக்கமாட்டார்.

மீராவால் வரையப்பட்ட சிறந்த ஓவியங்கள் பல, பாரீஸ் நகரில் நடைபெறும் கண்காட்சிகளில் இடம்பெற்று, காண் போரின் கவனத்தையும், பாராட்டுக்களையும் பெறுமளவுக்கு