பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

ஓவியக் கலை யில் மீரா தேர்ச்சி பெற்றார். கல்வி, இசை, ஓவியம் அனைத்திலும் அந்தச் சிறுவயதிலேயே அனைவரின் புகழாரங் களையும் சூடியவரானார்.

திருமண வயது வந்தது. பெற்றோர் அவருக்குத் திருமணத்தை நடத்தினார்கள். திருமணம் நடந்த பின்பும், தனது இலட்சியத்தின் மீதிருந்த நாட்டத்தை, தீவிர அக்கறையை அவர் குறைத்துக் கொள்ளவில்லை. மீராவின் ஆன்ம ஞான ஆவல் மேலும் அதிகமானது.

உலக மக்கள் அனைவரும் - தன் மக்கள், தன்னுடைய வர்கள் என்ற உரிமை உணர்ச்சியில், மீரா ஆழ்ந்த பற்றும், அன்பும், பரிவும் கொண்டு, 'யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ்த் தத்துவத்திற் கேற்ப எடுத்துக்காட்டாக வாழ்ந்தார்.

ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள உயிர்கள் அனைத்திடமும் மீரா, இரக்கம், கருணை, அன்பு கொண்டவ ராகவும், அதற்காக உழைப்பவராகவும் விளங்கினார்:

மக்கள் துயரங்கள் அகல வேண்டும், பாதி மிருகமாக - பாதி மனிதனாக வாழும் மக்கள் அனைவரும் தேவர்களாக வேண்டும்.

உண்மைகள் உலகை ஆட்சி செய்ய வேண்டும். பொய்மை கள் புறங்காட்டி அழிய வேண்டும். மக்கள் அனைவரும் ஒற்றுமை யாக, அன்பாக, ஆனந்தமாக அமர வாழ்வு வாழ வேண்டும்.

மீ ர வி ன் மனத்தில் இந்த சிந் தனைகளே எப்போதும் நடமாடிக் கொன் டிருந்தன. தனது சொந்த நலனைப் பற்றிய சிந் தனைகளோ, கவலை களோ சிறிதும் அவர் மனத்தில் இடம் பெற் றி ருக்க வி ல் ைல .