பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 座贯

தயவு தாட்சண்யத் தோடு மறுத்து, புதுச்சேரி ஆசிரம வாழ்க்கையே தனது ஆன்மீக வாழ்க்கை என்ற நம்பிக்கையோடு அரவிந்தர் வாழ்ந்த நேரம்:

அந்த நேரமான 1914-ஆம் ஆண்டில் தான்், மீராவுக்குப் புதுச்சேரியில் மகான் அரவிந்தர் என்னும் மகா புருஷர் ஒருவர் இருப்பது தெரிந்தது. அப்படிப்பட்ட ஒர் இந்திய மகரிஷியை, மகானை, மகா புருஷரை நேரில் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்ததால், அந்த ஞானப் பெருமகனாரைத் தரிசனம் செய்வதற்காக மீரா பாரீஸ் நகரை விடுத்துக் கப்பலில் புதுச்சேரி நகருக்குப் புறப்பட்டு வந்தார்:

புதுச்சேரிக்கு வந்து தங்கியிருந்த அரவிந்தரின் ஆன்ம சாதனை, பக்தித் துறையில் தீவிரமானது; இறைவனுடன் மிக நெருங்கிய தொடர்பு அவருக்கு ஏற்பட்டதாம்.

அடை தற்கரிய ஆன்ம அனுபவங்கள் ஆயிரம் ஆயிரமாய் அவரை வந்தடைந்தன; வட்டமிட்டன. வேத மகான்களால் கண்டு கூறப்படா அற்புத அனுபவங்களும், உபநிடத முனிவர்களின் அறிதற்கரிய, ஆற்றற்கரிய அகண்ட ஞான சிந்தனைகளும் அரவிந்தர் சுலபமாகக் கைவரப் பெற்றார்:

முதலில் அவர் இறங்கியது சுதந்திரப் போர்க் களமான, நாட்டுப் பற்றுடைய போராட்டக் களமாகும். அதற்குப் பிறகு இரண்டாவதாக அவர் இறங்கியது ஆன்மீக உலக இறைபணி களமாகும். இதற்காகவே மனித குலத்தை உய்விக்க அரும்பணிகள் பல அவர் ஆற்றி வந்தார்.

அந்த செயற்கரிய செய்யும் ஞானத்துறை பணிகளை நிறை வேற்றிட, மீரா எனப்படும் அன்னை அவர்களின் உதவி மிகமிக அவசியமானதாக அவருக்கு ஏற்பட்டது. அதனால், அன்னையின் வருகைக்காக மகான் அரவிந்தர் பெருமான் காத்துக் கொண்டிருந்தார்.

உலக ஆன்மீக வரலாற்றில், பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுப் போற்றப்பட வேண்டிய பொன்னான நாள் 1914-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 29-ஆம் நாள்!