பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 57

கட்டுக்கடங்காமல் போய் விடும். செத்த சடலங்களை எரிக்க முடியாத நிலை ஏற்படும்.

காய்ச்சல் வந்த மூன்றாவது நாள் நோயாளி இறக்கா விட்டால், ஏழாவது நாள் அவன் குணமடைந்து விடுவான்.

ஏனென்றால், ஜப்பான் நாட்டு மக்கள் மிக சுத்தமாகவும், கட்டுப்பாடாகவும், எச்சரிக்கையாகவும் வாழ்பவர்கள். அதனால் நோய் கண்டவர்கள் உயிர்த் தப்பிவிடவும் கூடும்.

அந்த நாட்டில் காய்ச்சல், கொள்ளை போன்ற நோய்கள் வருவது வாடிக்கை அல்ல; அபூர்வமே! எனவே, இந்த ப்ளு காய்ச்சல் பேரிடி போல ஜப்பான் மக்களுக்கு வந்தது.

இந்த ப்ளு காய்ச்சல் ஜப்பான் நாட்டு மக்களிடம் ஒரு பீதியை, பயத்தை உண்டாக்கி விட்டது. நோய் மற்றவர்களுக்குத் தொற்றிக் கொள்ளாமல் இருக்க, எல்லாருமே முகமூடி அணிந்துக் கொண்டார்கள் ஜப்பானில் - அன்னை ஒருவரைத் தவிர!

திருமதி அன்னை அவர்கள் மட்டும், தம்முடைய பாதுகாப்புச் சக்தியால் தம் உடலையும் முகத்தையும் போர்த்திக் கொண்டு. நெஞ்சில் பீதியோ, மனத்தில் கவலையோ கொள்ளாமல் ப்ளு நோய் பரவாமல் தடுக்க அக்கறையாக ஈடுபட்டிருந்தார்.

ஆனால், அன்னையுடன் வசித்து வந்தவள் அவரை விடாமல் நச்சரித்துக் கொண்டே இருந்தார். இது என்ன காய்ச்சல்? இந்த நோய் எங்கிருந்து வந்தது? இங்கே ஏன் வந்ததது? என்ன வியாதி இது? இதற்குப் பின்னால் என்ன சக்தி இருக்கிறது? என்பதை நீங்கள் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டீர்களா? என்று உடன் இருந்தவர் அன்னையைக் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் ஊரின் ஒரு கோடியில் இருந்த ஓர் இடத்திற்கு அன்னை டிராம் வண்டியில் போய்க் கொண்டிருந்தார். டிராமில்

இருந்தவர்கள் எல்லாரும் முகமூடி அணிந்து கொண்டு பயத்தால் பீடிக்கப்பட்டிருப்பதை அன்னை அவர்கள் கண்டார்கள்.