பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


58 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

அப்போதுதான்் அன்னையின் மனத்தில், 'இது என்ன நோய்? இதற்குப் பின்னால் என்ன சக்திகள் இருக்கின்றன? என்ற கேள்விகளின் எண்ணம் வலுவாக எழுந்தன?

போக வேண்டிய இடத்திற்குப் போய்விட்டுத் திரும்பிய அன்னை மீரா அவர்களுக்கும் கடுமையான காய்ச்சல் வந்துவிட்டது. திடீர் என்று அன்னையைத் தாக்கியது காய்ச்சல், என்றாலும், இந்த நோய் இப்படித்தான்் வரும்.

டாக்டர் வந்து விட்டார் - அன்னை அவர்களின் உடலைச் சோதித்துப் பார்க்க: 'இதுதான்் இந்த காய்ச்சலுக்கு என்னிடம் இருக்கும் சிறந்த மருந்து; என்னிடம் அது கொஞ்சம்தான்் இருக்கிறது.

காய்ச்சல் வந்த அனைவரும் இதே மருந்தை வாங்கிச் சாப்பிடுவதால் மருந்து தீர்ந்து விட்டது. அவசியம் இந்த மருந்தை, நீங்கள் சாப்பிடுங்கள் என்று டாக்டர் தன்னிடமுள்ள மருந்தை அன்னைக்குக் கொடுத்து வற்புறுத்தினார்.

அன்னை அவர்கள் அந்த மருந்தைச் சாப்பிட மறுத்து விட்டார். படுக்கையில் படுத்தப்படியே இருந்தார். காய்ச்சல் கடும் உச்ச நிலைக்குப் போய்விட்டது. அன்னைக்கு எப்போதும் இதே கேள்வி'என்ன காய்ச்சல் இது? இதன் பின்னால் என்ன இருக்கிறது? என்ற கேள்விகள் அதிக பலத்தோடு அவர் மனத்தைக் குடைந்து கொண்டே இருந்தன.

இரண்டாம் நாள் அன்னை படுத்தப் படுக்கையிலேயே இருந்தார். அப்போது அன்னை மிகத் தெளிவாக பார்த்தக் காட்சி இது:

ஒரு ஜீவன் அவரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அது இராணுவ உடையை அணிந்திருந்தது. அதன் தலையின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டு இருந்தது.

அன்னை அவர்கள் அருகே அது வந்தவுடன், திடீரென்று அன்னையின் மார்பு மீது பாய்ந்து உட்கார்ந்து கொண்டு, தனது