பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அருளாளர் ஆட்சி அமைப்பதே அன்னை - அரவிந்தர் இலட்சியம்!

வடலூர் வள்ளல் பெருமான் வாழ்ந்த காலத்தில், ஆங்கிலேயர் ஆட்சி நடந்து வந்தது. அவர்கள் இந்திய மக்களுக்குரிய சுதந்திர ஆட்சியைக் கொடுக்காமல், கொடுமையான, கொடுர மான அடக்கு முறைகள்ை இந்திய நாட்டிற்கு விடுதலை கேட்ட பாரத மக்கள் மீது; சட்டங்கள் மூலமாகச் சித்திரவதைகளையும், சிறை வாழ்க்கை களையும் தண்டனைகளாகத் திணித்து வந்தார்கள்.

அன்னியர்களின் இத்தகைய பேயாட்சிக் கோரங்களைக் கண்டிக்கும் எண்ணத்தில் - வள்ளல் பெருமான், 'கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக" என்று கண்டனம் செய்தார்.

ஆண்டு கொண்டிருக்கும் ஆட்சி ஒழிக்கப்பட்டால், பிறகு, நாட்டை ஆள்வது யார்? என்ற கேள்வி எழுமல்லவா? அதற்குப் பதில் கூறும் வகையில் இராமலிங்க அடிகளார் தனது "திரு அருட்பா”வில் பாடும்போது, அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க' என்று அறிவித்தார்.