பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


96 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

அன்னை அந்த ஆசிரமத்திற்கு வருகை தந்த பின்பு, அந்த அரவிந்த ஆசிரமம் அற்புத வளர்ச்சி பெற்றது. அம்மையார் ஆசிரமம் வந்தபோது முப்பதுபேர்கள்தான்் ஆசிரமவாசிகளாக இருந்தார்கள். இப்போது ஏறக்குறைய எண்ணுறு பேர்களாக பெருகினார்கள். அவர்கள் அனைவரும் ஆசிரமவாசிகளாய், அதன் முன்னேற்றத்துக் காக உழைப்பவர்களாய் சாதனை களைச் செய்து, அரவிந்த ஆசிரமத்தை உலகளாவிய பெருமை யோடு வளர்ந்துச் சாதனைகள் செய்துள்ளார்கள்.

அந்த அரவிந்தர் ஆசிரமத்தில் பெண்களும், குழந்தை களும், வயோதிகர்களும் ஆன்மீகவாதிகளாய் விளங்கி இன்றும் சாதனைகள் பல செய்து வருகின்றார்கள்.

அந்த ஆசிரமவாசிகளில், இந்த நாடு - அந்த நாடு என்ற நாடுகள் பேதமோ, இந்துக்கள், முஸ்லிம்கள், பார்சிகள், கிறிஸ்துவர்கள் என்ற மத பேதமோ எதுவும் கிடையாது.

ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், சீனர்கள், ஜப்பானி யர்கள், இந்தியர்கள் என்ற எல்லா நாட்டினரும் சமத்துவமாகக் கூடி, ஆசிரம வளர்ச்சிக்காகத் தொண்டாற்றி வருகிறார்கள்

எல்லா நாட்டவர்களும், எல்லா இனத்தவர்களும், எல்லா மதத்தவர்களும் ஒரே அன்னையின் மக்களாக, ஒரே தந்தையின் வாரிசுகளாக வாழ்ந்து வருகிறார்கள் உலக சகோதரத்துவத்தை, மனித நேய ஒருமைப்பாட்டை அங்கு போனால் இன்று

&#莓6ö瑄°。

அரவிந்தர் எந்த இலட்சியத்தை அடைய வேண்டும் என்று

வங்க விடுதலை வீரர் சித்தரஞ்சன்தாசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாரோ, அந்த இலட்சியத்தை, குறிக்கோளை, அவர் 1926-ஆம் ஆண்டு நவம்பர் 24-ஆம் நாளன்று அடைந்தார்.

மேற்குறிப்பிட்ட அன்று முதல் ஆசிரம வாழ்க்கையில் சில மாற்றங்கள் உருவாயின. அன்றுவரை அரவிந்தர் தமது ஆசிரம மாணவர்களைச் சந்தித்து வந்தார். ஆனால், அவர் தனிமை யாகவே வாழ்ந்து வந்தார்.