பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதற் பதிப்பு : குடும்பக் கட்டுப்பாடு வாரம் 5.12.1966

உரிமை : ஆசிரியரது விலை : ரூ. 1.25

ஆசிரியர் 1891-ஆம் ஆண்டில் பிறந்தவர். 5வது பாரம் முதலே முதற் பரிசு பெற்றார். எம்.ஏ.-இல் பல்கலைக் கழகத் தங்கப்பதக்கம் பெற்ற பேரறிஞர். 1924-ல் வக்கீல் தொழிலைப் புறக்கணித்து காங்கிரஸில் சேர்ந்து ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். காந்தியடிகளின் தத்துவங்களை முதன்முதலில் மொழிபெயர்த்து தமிழர்க்கு உதவினார். தீண்டாமை விலக்குக்குத் தீவிரமாக உழைத்து வந்தார். கள்ளுக்கடை மறியல் நடத்தி சிறை சென்றார். தமிழ் ஹரிஜன் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தார். ஆங்கிலத்திலும், தமிழிலும் பாண்டித்தியமுடையவர். சென்னை செனட் சபையில் அங்கம் வகித்தார். இலக்கியங்களை ஆராய்ந்து அறியும் ஆற்றல் உடையவர், இலக்கிய கர்த்தாக்களின் குறிக்கோள் என்ன என்பதை சிறிதும் தயக்கமின்றி எடுத்து உரைக்கும் தன்மையுடையவர். தேச முன்னேற்றத்திற்கும் மக்கள் வாழ்வு நலம் பெறவும் சிறுவர் அறிவு பெறவும் பல அரிய நூல்களை எழுதியுள்ளார். பல நூல்களுக்கு அரசாங்கம் பரிசுகள் வழங்கி ஆசிரியரைப் பெருமைப்படுத்தியுள்ளது. கலைக்களஞ்சியக் கூட்டாசிரியராக இருந்தார். தற்போது ஓய்வு பெற்று வருகிறார்.