பக்கம்:ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆபுத்திரன்

21

கொண்டு தொழுதாலன்றி, உனது, பழம்பிறப்பின் செய்தியை நீ அறியாய்; ஆதலால், அரசே! அங்கே விரைந்து வருவாயாக’’ என்று சொல்லிவிட்டுத் தான் எழுந்து ஆகாயவழியேசென்று, சூரியன் அஸ்தமிக்கு முன்னரே மணிபல்லவத்தில் இறங்கிப் புத்த பீடிகையைத் தொழுதாள். அது வழக்கம்போல் அவளது பழம்பிறப்பை அறிவித்தது. அதனைவியந்து அங்கே தங்கியிருந்தனள்.

புண்ணியராஜன், மணிமேகலை கூறிய செய்தியைக் கேட்ட அளவில் மிகுந்த ஆச்சரியமடைந்தான். இப்பிறப்பின் வரலாற்றையும் சென்ற பிறப்பின் வரலாற்றையும் அறிய வேண்டுமென்ற ஆசை தூண்டுதலால், அவன் அச்சோலையினின்றும் உடனே புறப்பட்டு நகரையடைந்து, தன்னை வளர்த்ததாயாகிய அமரசுந்தரியைக் கண்டு, தனது பிறப்பு வரலாற்றை உரைக்கும்படி கேட்டான். அவள் , அவன் வரலாறு முழுவதையும் கூறினாள். அதனைக் கேட்டு அவன் வருத்தமுற்று, அரசாட்சியில் வெறுப்புக்கொண்டு, தான் துறவியாய் மணிபல்லவம் செல்வதற்குத் துணிந்து, தன் கருத்தை வெளியிட்டான். அதனேக்கேட்ட சனமித்திரன் என்னும் மந்திரி, புண்ணியராஜனை வணங்கி, "அரசே! வாழ்க; என் சொற்களைக் கேட்டருள வேண்டும்; உன்னை நமது அரசன் பெறுவதற்கு முன்னர் இந்நாட்டில் பன்னிரண்டு வருடம் மழை பெய்யாமல் அதனால் வறுமை மிகுந்தது; உயிர்களெல்லாம் பசியால் வருந்தின; அப்போது நீ கோடைமழை தோன்றினாற்போல் தோன்றினை. அங்ஙணம் நீ தோன்றியபின் இந்நாட்டில் எல்லா வளங்களும் நிரம்பின; உயிர்கள் பசித்துன்ப முதலான துன்பங்களில்லாமல் வாழ்வனவாயின; நீ இச்சமயம் இந்நாட்டை விட்டு நீங்குவையாயின் எல்லா உயிர்களும் தாயைப்பிரிந்த