பக்கம்:ஆப்பிள் பசி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“கொஞ்சம் நில்லுங்க -- நான் போய் முதல்லே லைட்டைப் போடறேன் . அப்புறம் நீங்க வரலாம். இது எனக்குப் பழக்கப்பட்ட இருட்டு!” என்று கூறி நாலே எட்டில் மாடிக் கதவை அடைந்து பூசலில் கோத்திருந்த சாவியால் பூட்டைத் திறந்த சாமண்ணா ஸ்விச்சைப் போட்டதும் அழுக்கு பல்பு ஒன்று சோகமாய்ச் சிரித்தது.

“அட, எலக்ட்ரிக் விளக்கு!” என்று வியந்து கொண்டே பின்னோடு வந்து நின்றான் குமாரசாமி.

“சத்தம் போட்டுச் சொல்லாதீங்க, ஓட்டல்காரர் காதிலே விழுந்தா ‘ஓசி வீட்டுக்கு விளக்கு வேறு கொசுறா?’ன்னு '‘கட்’ பண்ணிடச் சொல்வார். இது அவர் வீடு” என்றான் சாமண்ணா.

“அப்படின்னா இந்த வீட்டுக்கு வாடகை கிடையாதா?”

“ஊஹூம், இதை ஓட்டல்ல வேலை செய்யறவங்களுக்கு விட்டு வச்சிருந்தார். இப்ப அவங்க எல்லாரும் காலி பண்ணிட்டாங்க.”

“ஏன்?”

“ஒரு ஸர்வர் திடீர்னு இங்கே தூக்கு மாட்டிக்கிட்டு செத்துட்டானாம். ஏதோ காதல் விவகாரமாம். மத்த பசங்க பயத்துலே காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க. அப்புறம் பேய் பிசாசு இருக்கும்னு யாருமே குடி வரலை இங்கே. அவருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி. நான் மாட்டிக்கிட்டேன். அந்த ஓட்டலுக்கு தினமும் சாப்பிடப் போவேன். ஒருநாள் அந்த ஓட்டல்காரரிடம் ஏதாவது வாடகைக்கு ரூம்

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/15&oldid=1029335" இலிருந்து மீள்விக்கப்பட்டது