பக்கம்:ஆப்பிள் பசி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதன் நடுப் பக்கத்தில் காணப்பட்ட வண்ணப் படம் ஒன்று அவருக்கு எரிச்சல் மூட்டியது.

சாமண்ணுவும், சுபத்ரா முகர்ஜியும் தம்பதி போல் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு நின்றனர்.

கீழே ஆங்கிலத்தில்... 'இவர்கள் வெறும் திரை ஜோடி மட்டும்ல்ல வாழ்க்கை ஜோடியாகவும் திட்டமிட்டிருக்கிருர் கள்' என்று ஒரு வாசகம்.

'து' என்று அதைத் தூக்கி எறிந்தார். வெளியே போக எழுந்தவர் ஒரு கணம் தயங்கி அந்தப் பத்திரிகையைக் குனிந்து கையோடு எடுத்துக் கொண்டார். நேராக வீட்டுக்குப் போய் சகுந்தலாவின் அறைக்குள் எட்டிப் பார்த்தார். அவளை அங்கே காணவில்லை. சட்டென அவளது மேஜை மீது அந்தப்படத்தைப் பரப்பி வைத்துவிட்டு வெளியே வந்தார். ‘சகுந்தலா அந்தப் படத்தைப் பார்ப்பாள். பார்த்துவிட்டுக் கண்ணிர் விடுவாள். சாமண்ணுவின் துரோகம் அவளைச் சுட்டுப் பொசுக்கும். உடம் பெல்லாம் தணலாய் தகிக்கும். அந்தத் துயரம் மிக்க உச்சத்தில் அவள் கண்ணிர் விடும்போது நாம் அருகில் இருக்கக் கூடாது. எங்காவது வெளியே போய்விட வேண்டும்'. உடனே சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளப் கட்டடத்தை நோக்கி விரைந்தார்.

கல்கத்தாவைப் பார்த்ததும் சிங்காரப் பொட்டு மலைத்து நின்று விட்டான். ஆடம்பரங்கள் நிறைந்த குபேரப் பட்டண மாக மின்னியது அது. நிறைய இங்கிலீஷ் காரிகள் உலாவி ர்ைகள். கார்கள் புதிது புதிதாக ஓடின. பெரிய மாளிகை களும் அடுக்கு மாடிக் கட்டிடங்களும், சாலை மரங்களும் கம்பீர மாக நின்றன. ஹெளரா பிரிட்ஜ் ஆச்சரியத்தைத் தந்தது. டிராம் கார் 'கிணுங், கிணுங்' என்று மணி அடித்தது.

தமிழர் பகுதியில் 'கோமளவிலாஸ் ஒட்டலில் ரூம் பிடித்து, குளித்து சாப்பிட்டு முடித்ததும் அ ங் கி ருந்து கி ௗ ம் பி சாமண்ணுவைச் சந்திக்கப் புறப்பட்டு விட்டான். 'உனக்கு வாழ்வு தந்த நண்பனை வெறுங்கையோடு பார்க்கலாமா? என்று கேட்டது உள்குரல். வழியில் வங்காளிப் பெண் ஒருத்தி ஆஸ்திரேலிய திராட்சையைக் கூவி விற்றுக் கொண்டிருந் தாள். அழகாயிருந்தாள். பேரம் செய்யாமல் வாங்கிக் கொண் 1.: 1ெ.

பிறகு சாமண்ணுவின் விலாசம் கண்டுபிடித்து அந்தப் பெரிய பங்களா முன்னல் போய் நின்றபோதுகாக்கிச் சட்டை தாவல்காரன் தடுத்து நிறுத்தினன். உடம்பு குறுகிவிட்டது.

சாமண்ணுவின் நண்பன். கிராமத்திலிருந்து வந்திருக்கிறேன்" எனறு சொல்லி அனுமதி பெற்ருன். சிறிதும் பெரிதுமாகப் பலகார்கள் சாமண்ணுவுக்காகக் காத்திருந்தன. வராந்தாவில் 182

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/175&oldid=1028161" இலிருந்து மீள்விக்கப்பட்டது