பக்கம்:ஆப்பிள் பசி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நின்ற இளைஞன் ஒருவன் சிங்காரப் பொட்டுவின் பெயரைக் கேட்டுச் சீட்டில் எழுதி வாங்கிக் கொண்டு, 'இப்படி உட்கா ருங்க. கூப்பிடருேம்' என்று முகப்பு ஹாலில் உட்கார வைத் தான.

மேலே பிரம்மாண்டமான 'சேண்ட் லியர் ஒன்று காற்றில் அசைந்த போது சிறுசிறு கண்ணுடிக் குழல் சரங்கள் 'கிணு கிணு'த்தன.

எதிரே சுவரில் கங்கைக் கரைக் காட்சியின் ஒவியம் தத்ரூப மாக இருந்தது. சில்க் பிடிகளுடன் நீளநீளமாய் வெல்வெட் சோபாக்கள்! நடுவில் ஒவல் வடிவத்திலிருந்த மேஜையின் பளபளப்பு:பிரதி பிம்பம் காட்டியது. -

சிங்காரப் பொட்டுவுக்கு முன்பே வந்து ஹாலில் காத்திருந் தவர்கள் ஒவ்வொருத்தராக உள்ளே போய் வந்தார்கள். 'அண்ணன் சாமண்ணுவைப் பார்க்கவா இவ்வளவு கூட்டம்! அண்ணனுககு இவ்வளவு மரியாதையும் மதிப்பும் வந்து விட்டதா!' -

மனசில் சந்தோஷம் புரண்டது. - 'அடேடே, ஊரிலேர்ந்து வக்கீல் ஐயா, அவங்க சம்சாரம், குமாரசாமி, பாப்பா இவங்கல்லாம் வந்து பார்க்காமப் போயிட்டாங்களே!' - -

எல்லோரும் போன பிறகு சிங்காரப் பொட்டு கடைசியாக அழைக்கப்பட்டான்.

உள்ளே ஒரு நடையைத் தாண்டி அந்தப் பெரிய அறைக்குள் காலை விைத்ததும் சாமண்ணு தென்பட்டான். அந்தக் குசேல சாமண்ணுவுக்கும் இப்போது காணும் குபேர சாமண்ணுவுக் கும் எத்தனை வித்தியாசம்! மேனியில் பணக்காரத்தனம் தெரிந் தது. பாவனைகளில் பெரிய மனுஷத்தனம் இருந்தது. "வா சிங்காரம், எப்ப வந்தே? முன்னடி ஒரு லெட்டர் போட் ருக்கக் கூடாதா? ஸ்டேஷனுக்கு வண்டி அனுப்பியிருப் பேனே? எல்லாரும் நல்லாயிருக்காங்களா? நாடகமெல்லாம் நடக்குதா?' என்று ஒரு தோரணையுடன் கேள்விகளை அடுக் கிஞன். - -

மேஜைகளும் மற்ற சாதனங்களும் விதவிதமாய்க் குவிந் திருக்க, மேலே சில்க் பங்கா ஒன்று பெரிய ஊஞ்சல் போல Վջէւգա5/. - -

"அண்ணே!' என்று கூறிய சிங்காரப் பொட்டுவுக்குச் சந்தோஷத்தில் நெஞ்சு விம்மியது. அவனையும் மீறித் தாவிப் போய் பரதன் வேடத்தில் ராமனைக் கட்டிக் கொள்வது பேர்ல் தழுவிக் கொண்டான். - -

அப்படியே அவன் தோள் மேலே வளைத்துக் கை போட்டுக் கொண்டு யாரும் பார்க்காதபடி அடுத்த அறைக்குள் அழைத் துப் போய் விட்டான். * . -

183

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/176&oldid=1028163" இலிருந்து மீள்விக்கப்பட்டது