பக்கம்:ஆப்பிள் பசி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

சிாமண்ணுவும் சுபத்ராவும் உள்ளே நுழைந்ததும் சிங்காரம் ஹால் சோபாவில் போய்க் காத்திருந்தான். கோமள, விலாஸ் போவதற்கு சாமண்ணு கார் அனுப்புவான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் ஒரு சிப்பந்தி பெரிய வெள்ளித் தட்டில் சீமை பாட்டில் ஒன்றை வைத்து உள்ளே போய்க் கொண் டிருந்தான். -

'அண்ணன் குடிப்பாரோ? * அடுத்தாற்போல் இரண்டு சிப்பந்திகள் தட்டு தின்பண்டங்களை எடுத்துப் போனர்கள். -

ஹாலில் தாத்தா காலத்துக் கடிகாரம் ஒன்று நீளமான பெண்டுலத்தை ஊஞ்சலிட்டுக் கொண்டிருந்தது.

சாமண்ணு இருந்த அறைக் கதவு திறக்கும்போதெல்லாம் கே. ஸி. டேயின் சங்கீதம் விட்டு விட்டு ஒலித்தது.

நிமிட முள் இருபது முறை கடிகார முகத்தைச் சுற்றும் வரை காத்திருந்தான். பசி எடுத்தது. ஆயாசம் வந்தது. என்ன ஒருவேளை அண்ணன் மறந்துட்டாரா?” - -

யாரோ இரண்டு பேர் உள்ளே வந்தார்கள். புது ஆசாமிகள். 'நீங்க யாரு?' என்று சிங்காரத்தைக் கேட்டார்கள். 'ஐயா இருக்கச் சொன்னரு!' . "யாரு, சாமண்ணுவா?” "ஆமாம்.' "அவர் இனிமே இன்னிக்கு வெளியே வர மாட்டார். நீங்க போகலாம்' என்றனர். . 188

நிறையத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/179&oldid=1028169" இலிருந்து மீள்விக்கப்பட்டது