பக்கம்:ஆப்பிள் பசி.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

கோமளம் சென்ற பிறகு சாமண்ணு கட்டிலில் போய் 'தொப்'பென்று அமர்ந்தான். மூச்சு முட்டியது. இதயத்தை அமுக்கிக் கொண்டான். அந்த அதிர்ச்சியிலிருந்து விடுபட ஏக நேரம் ஆயிற்று.

எனக்குத்தான் துக்கம் நிகழ்ந்துவிட்டது என்ருல் என்னைத்

தெரிந்தவர்களுக்குமா இந்த க்தி: மகாலட்சுமி மாதிரி இருந் தாளே கோமள்ம் மாமி' களை பொருந்திய அந்த வைர பேசரி முகத்தை அவளுல் மறக்க முடியவில்லை. வைரத்துக்கு ஈடு கொடுக்கும் சிரிப்பு. கையில் பூக்கூடை எடுத்து நின்ருல் ரவி வர்மா சித்திரம்!

அந்த ஒவியத்தை தெய்வம் இப்போது அலங்கோலமாக அழித்துவிட்டிருந்தது! -

'ஐயா சாப்பிடலீங்களா?' எனக் கேட்டான் கந்தப்பன்.

"வேண்டாம்பா, நீ வீட்டுக்குப் போ' என்று கூறி அனுப்பி விட்டான் சாமண்ணு. -

கந்தப்பன் மனமில்லாமல் தயங்கியபடி கதவைச் சாத்திக் கொண்டு வெளியேறினன். -

சாமண்ணுவுக்குத் தூக்கம் வரவில்லை. படுக்கையில் புரண்டு. கொண்டிருந்தான். வாசலிலிருந்து வந்த பவழ மல்லியின் வாசனை மூக்கைத் தாக்கியது. சன்னல் ஒரம் நக்ர்ந்து போய் வெளியே பார்த்தான். தெரு ஓரத்திலிருந்த பவழமல்லி மரம் பூக்களை உதிர்த்துப் பாவாடை விரித்திருந்த காட்சி நிலாவுடன் கொஞ்சியது. அந்த அடக்கமான மணம் உள்ளத்தில் கிளர்ச்சி யை உண்டாக்கியது. சகுந்தலா கண்முன் வந்தாள். பவள 3.18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/211&oldid=1028234" இலிருந்து மீள்விக்கப்பட்டது