பக்கம்:ஆப்பிள் பசி.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மல்லியாய்ச் சிரித்தாள். அவனை அலட்சியப்படுத்திய காட்சி கள் அடுத்தடுத்து வந்தன. மன்னிக்க முடியாத குற்றம் இழைத்து விட்ட கொடுமையை எண்ணிக் குமுறிஞன். மெதுவாகத் தத்தி நடந்து வந்து மீண்டும் கட்டிலில் படுத்தான்.

எண்ணச் சூழலில், சகுந்தலா சுற்றி வந்தாள். கோயில் பக்கத்திலிருந்து வாத்திய ஒலிகள் வந்தன.

பக்கத்துப் பெருமாள் கோவிலிலிருந்து ஊர்வலம் புறப் பட்டிருக்கும். ஆணித் திருமஞ்சனம், போன வருடம் இந்த உற் சவத்தை முன்னிட்டு ஸ்பெஷல் நாடகம் போட்டார்கள். கூட்ட L0ff 6ð7 #ix. L-Ł – LÚ,

நாதஸ்வரம் 'குகசரவணபவ”வில் குழைந்து கொண்டிருந் தது. பாண்டு வாத்திய முழக்கம் கும்’மென்று ஊரை மயக்கி யது. வேலூர் நாதமுனி கோஷ்டியாயிருக்க வேண்டும். பத்துப் பதினைந்து பேர் சேர்ந்து இழையும்போது என்ன இனிமை!

ஊர்வலம் அவன் வீட்டை நெருங்கி வருவதை காஸ் லைட்டு கள் பளிர் பளிர் என்றி அறிவித்தன. ஊர்வல முன்வரிசை பார்வைக்கு வந்தது. பிரமுகர்களும் பட்டுப் புடவைகளும் காரைச் சூழ்ந்து நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

நாதஸ்வர வித்வான் கழுத்தில் பவுன் சங்கிலிகள் ஜொலிக்க, இடுப்பில் பட்டு வஸ்திரம் சுற்றி, மேலே குடுமியை வாரி இழுத்துப் பின் கூம்பலாக மூட்டை கட்டி,நெற்றியில் ஜவ்வாது சந்தனத்துடன் காதுகளில் வைரக் கடுக்கன் மின்ன நடந்து வந்தார்.

நாதமுனி கோஷ்டியின் விசித்திர உலோக வாத்தியங்கள் வெளிச்சத்தில் மின்னிக் கொண்டு வந்தன.

அது யார்? வேட்டியும் சட்டையுமாய் இடுப்பில் சரிகை, உத்தரீயத்தை இழுத்துக் கட்டிக் கொண்டு? டாக்டர் ராமமூர்த்தி யா! ஒகோ! தெரிந்தவர் வீட்டுக் கல்யாணமோ? அடுத்து மலர் அலங்காரத்துடன் ஊர்வலம் சென்ற கார் அன்னம் போலத் தவழ, அதில் அந்த இளம் தம்பதியர் உட்கார்ந்திருக்க, சாமண்ணுவின் குடல் உள்ளே சுருண்டது.

மணமகன் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனல் மணமகளைப் பார்த்ததும், யார் அது? சகுந்தலாவா? நெற்றிச் சரத்திலும், மாட்டலிலும், மூக்குத்தியிலும், அந்தச் சிற்ப முகம் ஜொலித்தது. அந்தக் கரு விழிகளின் இன்பச் சுழல்களில் அவன் எத்தனை முறை மயங்கியிருக்கிருன்!

இதயத்தில் ஒரு கன நாடி டண் என்ற சத்தத்துடன் அறுந் தது. கைகள் சன்னல் கம்பிகளை இறுகப் பற்றின. அவற்றை விடுவித்துக் கொண்டு நெற்றிப் பொட்டை சுழிகளில் வைத்து அழுத்தினன். . . . o

'நீதான் அவளைப் புறக்கணித்தாயே! இப்போது ஏன் வேதனைப்படுகிருய்? உனக்கும் அவளுக்கும்தான் பந்தம் இல்லை யே! அவள் இப்போது இன்னெருத்தன் மனைவி! இனி அவள்

219

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/212&oldid=1028236" இலிருந்து மீள்விக்கப்பட்டது