பக்கம்:ஆப்பிள் பசி.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்கே நிக்குது” என்ருன் கந்தப்பன்., ಅಣ್ಣ சிரித்தான். 'இனிமே நாள் நட்சத்திரம் பார்க்கறதா இல்லை. அதெல்லாம் Taడ్డి @ಾಗ್ಲಿ ஒண்னும்செய்யாது.செய்யவேண்டியதையெ ல்லாம்.செஞ்சு: டுது. பாக்கி ஒண்ணும் இல்லை. ஆக வேண்டியதைப் பாரு என்று தீர்மானமாய்க் கூறினன் சாமண்ணு.

ராகுகாலம் கழித்து மாட்டு வண்டி ஒன்று கொண்டு வந் தான் கந்தப்பன். வயதான வண்டிக்காரர் கையில் சாட்டை யுடன் கும்பிடு போட்டார். -

"ராமர் கோயில் அக்கிரகாரத்துக்கு எப்போ போய்ச் சேர லாம்?' சாமண்ணு கேட்டான்.

'ராத்திரி ஒன்பதுக்குள்ளே போயிரலாங்க! இப்போதே புறப்பட்டாத்தான் முடியும் மழை வர மாதிரித் தெரியுது.'

'மாசிலாமணி முதலியார் வந்துரட்டும். இதோ இப்ப வந்துடுவார்.”

மாசிலாமணி சொன்னபடியே பணத்தோடு வந்துவிட்டார். 'இப்ப இதை வெச்சுக்குங்க. வீட்டு விஷயம் அப்புறம் பேசிக்கலாம்,' என்று கூறி ஆயிரம் ரூபாயைக் கொடுத்தார். மெள்ள க்ரச்சை ஊன்றி வாசலுக்கு வந்தான் சாமண்ணு. வண்டி ஏறும்போது சற்றுத் தயங்கி ஊரை ஒருமுறை வளைத் துப்பார்த்தான்.தெருக்கோடியில்பெருமாள்கோயில்கோபுரம் தெரிந்தது. -

அந்த ஊரில் அவளுேடு பழகிய அத்தனை பேரும் அவன் கண்ணில் தெரிந்தார்கள். இறந்து போன வக்கீல் தொடங்கி, டாக்டர், சகுந்தலா, நாடக நடிகர்கள், பாட்டுக்காரர்கள், ஒட்டல்காரர், ஆர்மோனியக்காரர், மாடிப்படி நாய் எல்லா ருமே! - s -

கண்ணில் நீர் பெருகியது. ஏதோ போன ஜன்மத்தில் அவர் களோடு வாழ்ந்தது போல் தோன்றியது. தெருவும் ஊருமே இப்போது அந்நியமாகத் தோன்றியது. -

வண்டி புறப்பட்டதும் கந்தப்பன் கைகூப்பினன். தெரு முடிந்ததும் சாலை இரு பக்க மர வரிசை நடுவே ஓடியது. கருத்த ஆகாயம் பிரம்மாண்டமாகத் தெரிய, காற்று ஊசி வாடையாக அடித்தது.

'ஹய் ஹய்' என்ருன் வண்டிக்காரன். "கிறிச் கிறிச் என்று சத்தமிட்டுக் கொண்டு புறப்பட்டது அந்த வண்டி. - -

அம்மா வருகிறேன்” என்று துக்கம் பொங்க வாய்விட்டுக் கூவிஞன் சாமண்ணு. தும்பைப் பூ நரையோடு, அம்மா அவனே இஇங்கிய கண்களால் பார்ப்பது போல உணர்ந்தான்.

அம்மா! உன் சந்நிதானத்திற்கே வந்து விடுகிறேன். கால் ஊனமாயிட்டுது! தெரியுமோ? நம்ம பழைய வீட்டிலேதான் இருப்பேன்! என்னை ஆசீர்வாதம் பண்ணு!”

228

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/221&oldid=1028245" இலிருந்து மீள்விக்கப்பட்டது