பக்கம்:ஆப்பிள் பசி.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்புறமாக வந்து உசுப்பினன். தொட்டவுடன் கை சுட்டது. 'ஐயா, ஐயா!'

வெறும் முனகல்தான்.

திடீரென்று வண்டி பக்கவாட்டில் சாயத் தொடங்கியது. ஒடையில்வந்தவெள்ளத்தின் கனமும்வேகமும்கூடுதலாயிற்று. மாடுகள் தடுமாறின. வண்டிக்காரன் திடுக்கிட்டான். தண்ணி ரின் ஆவேசம்.அதிகமாகி இதற்குள் வண்டிபள்ளத்தில் இறங்கிக் குடை சாய்ந்தது. "ஐயா!' என்று அலறிஞன் வண்டிக்கார்ன்.

சாலை உடைப்பெடுத்திருந்ததால் பள்ளத்தில் இறங்கிய வண்டி உருண்டுவிட்டது. .

சிTமண்ணு முகத்தை மெள்ள மெள்ளத் திருப்பினன். கண்ணை விழித்துப் பார்த்தான். - .

எங்கே இருக்கிருேம் என்று தெரியவில்லை. எதுவும் புரிய வில்லை. .

'அம்மா.... அம்மா!' உடம்பு வெடவெடத்தது. அவனது காதில் மட்டும் பிரக்ஞை இருக்கிறதோ? 'ஒ' என்று இரைச்சல் கேட்கிறதே! ஷவர் இப்படிச் சத்தம் போடாதே! ஒருவேளை! மழையோ!

நாட்கணக்கில் அங்கே இருப்பது போன்ற பிரமை! திரும்பி உணர்வு வந்தபோது ஷவர் நின்றுவிட்டது. யாரோ அவனைத் தொடுகிரு.ர்கள். . -

"உயிர் இருக்கு குமாரசாமி!' என்றது ஒரு குரல். 'பாவம்! யாரோ தெரியலை. நினைவு இல்ல்ாமக் கிடக் கிருங்க!' இன்னெரு குரல்.

"இந்தா முருக்ேசா முதல்லே ஆளைத் தூக்கி நம்ம வண்டி யிலே போடுவம்! ராத்திரி வீட்டில்ே வச்சிருந்து காலையில்ே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவம்.”

சாமண்ணுவுக்குச் சிறிது நேரம் எதுவும் தெரியவில்லை. பிறகு ஈரத்தை விட்டு உடல் மேலே மிதப்பது தெரிந்தது. அடுத்து, ஒரு வைக்கோல் மெத்தையில் கிடப்பது தெரிந்தது.

'ஊரை விட்டுப் புறப்பட்ட்ோமே! மழ்ை அடித்ததே! இப்போது இல்லையே! என்னவோ குரல் கேட்கிறத்ே'

'நல்லா நனஞ்சிருக்காரு குமாரசாமி!' - . ஆமாம். ஜூரம் வேற அடிக்குது. ஜன்னி கண்டிருக்கு." "வீட்டிலேபோய் உடனே உலர்ந்ததுண். போட்டுத்துவட்டிக் கம்பளியாலே போர்த்தனும்.' . .

கண்ணை மூடுகிருன். எல்லாம் இருட்டாகிறது. எத்தனை யுகமான இருட்டு? தெரியாது. கண்கள் லேசாக விழிக்க, பார்வை மங்கலாகத் தெரிய, ஏதோ ஒரு விட்டின் ஆன்றத்தள் இருப்பது புலகிைறது.

என்ன இது? எங்கே வந்திருக்கிருேம் என் சொந்த கிரா 234

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/227&oldid=1028249" இலிருந்து மீள்விக்கப்பட்டது