பக்கம்:ஆப்பிள் பசி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



குந்தலா கார் ஏறச் சென்றவள் சற்றுத் தயங்கினாள். சாமண்ணாவிடம் இன்னும் கொஞ்சம் பேச வேண்டும். அவனை மனமாரப் பாராட்ட வேண்டும் போலிருந்தது அவளுக்கு. தயங்கி நின்றவள் வசீகரமான முத்துப் பல் வரிசையில் சிரித்து, “என்ன பிரமாதம் போங்கள். கடைசியில் கண்ணீர் வந்துடுத்து!” என்றாள்.

“நல்ல வசூல் ஆகும் பாருங்கோ” என்றார் டாக்டர் ராமமூர்த்தி.

“எல்லாம் உங்க ஆசிர்வாதம்!” என்று சாமண்ணா கைகூப்பினான்.

“இன்னொரு தடவை கூடப் பார்க்கணும் போல இருக்கு, வெள்ளிக்கிழமை மறுபடியும் வரலாமா, அப்பா?” என்று கேட்டு சாமண்ணவைத் தன் அழகிய விழிகளால் பார்த்துக் கொண்டே ஸெடானின் பின்புறம் போய் உட்கார்ந்தாள். டாக்டரும் ஏறி அமர்ந்து கையைக் காண்பித்தார்.

தேவரதம் ஒன்றில் இருவரும் கொலு வீற்றிருப்பது போல் இருந்தது அது.

அத்தனை நேரமாக அந்தக் காட்சியைச் சற்று எட்ட இருந்தபடியே கவனித்துக் கொண்டிருந்த பாப்பாவுக்கு உள்ளத்தில் ஒரே எரிச்சலாய்ப் புகைத்தது.

“என்னிடம் ஒரு வார்த்தை பேசினாரா? நான் இங்கே வத்திருப்பது கூடத் தெரியாததுபோல் ஓர் அலட்சியமா? அந்தப் பெண்ணோடு எத்தனை இளிப்பு!” என்று பொருமினாள்,

85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/84&oldid=1029644" இலிருந்து மீள்விக்கப்பட்டது