பக்கம்:ஆப்பிள் பசி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“அர்ஜுன மகாராஜாதானே? அமர்க்களம். அந்த வேஷத்துல எத்தனை அழகா இருந்தான் பார்த்தாயா அந்த சாமண்ணா!” என்று கோமளம் வியக்க,

“என்கிட்டே ஒரு வார்த்தை கூடப் பேசல்ல மாமி” என்று பாப்பா துக்கம் தொண்டையை அடைக்கச் சொன்ன போது கோமளத்துக்குப் பரிதாபமாயிருந்தது.

“ஏன், என்னாச்சு? எதுக்கு இப்படி வருத்தப்படறே?” என்று அனுதாபத்தோடு கேட்டாள் கோமளம்.

டாக்டரையும், அவர் பெண்ணையும் ரொம்ப அக்கறையா கார் வரை போய் வழி அனுப்பி வச்சவருக்கு நான் எதிரிலேயே மலை மாதிரி நிக்கறது கண் தெரியலையாக்கும்! என்னைப் பார்க்கலைன்னாலும் உங்களையாவது வந்து பார்த்திருக்கலாம் இல்லையா?”

“இதப் பாரு! பாப்பா! எங்காத்துக்காரர் குணம்தான் உனக்கு நன்னாத் தெரியுமே! வெளியிலே சட்சட்ன்னு வந்து வண்டி ஏறிடுவார். கூட்டத்தில் நிற்கிறதே அவருக்குப் பிடிக்காது. அதனால் ஒருவேளை பார்க்க முடியாமல் போயிருக்கலாம். இதையெல்லாம் நாம் பெரிசா நினைச்சு ஒரு குத்தலா எடுத்துக்கக் கூடாதும்மா...”

“இருக்கட்டும். நீங்க விடுவிடுன்னு போறதாகவே இருக்கட்டும். அதுக்குள்ளே ஓடி வந்து ஒரு வார்த்தை சொல்லி வழி அனுப்பியிருக்க வேண்டாமோ? நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு முக்கியம்னு கூடத் தெரியாமப் போச்சா? இந்த டிராமா நடக்கறதுக்கே நீங்கதானே மூல காரணம்?”

“இந்தா பாப்பா! நாங்க வெறும் மூல காரணம்தான். மூலதனக் காரணம் நீதானே?” என்று சிரித்த கோமளம் மாமி, “சாமண்ணு நீ நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லம்மா, அவன் ரொம்ப நல்ல பையன். அந்த கும்பல்ல அவன் கண்ணிலே நீ பட்டிருக்க மாட்டே. இல்லாட்டா. நிச்சயம் உன்னண்டை வந்து பேசியிருப்பான். அதோட அர்ச்சுன வேஷத்துல அப்படிவே வெளியே எத்தனை நேரம் நிப்பான்? சந்தர்ப்பம் அப்படி. உன் பேர்லயோ எங்க பேர்லயோ அவனுக்கு விரோதமா, என்ன? அசடாட்டம் பேசாதே! அவன்' மனசு எனக்குத் தெரியும். நாடகம் நடக்கிறப்போ, கவனிச்சுண்டுதான் இருந்தேன். ஒவ்வொரு பாட்டு ஆரம்பிக்கும் போதும் ஆர்மோனியக்காரர் வந்து நின்னுண்டு அவரைப் பார்க்கிறாப் போல உன்னை ஒரு பார்வை பார்க்கத் தவறலையே!”

“என்னைப் பார்த்தாரா? நிச்சயமா என்னைப் பார்த்தாரா? அதென்னவோ நீங்கதான் சொல்றீங்க. எனக்கு அப்படித் தெரியலை” என்று அகமும் முகமும் மலரக் கூறினாள் பாப்பா.

“உன்னைப் பார்க்கறதுன்னா அப்படி அப்பட்டமா நேர

87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/86&oldid=1029649" இலிருந்து மீள்விக்கப்பட்டது