பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 - - வளையல்

தனியார் நூலகமாயினும், பொது நூலகமாயினும் புத்தகங்க ளைத் தொகுப்பது ஒரு பணிமட்டுமன்று; அஃது ஒரு கலை; ஒரு திறன். தொகுக்கப்பட்ட புத்தகங்களைப் பகுப்பது ஒரு துன் கலை எனலாம். ஒவ்வொரு நூலின் மேலோட்டமான நூல்ை அறிந்தால்தான் பகுக்க இயலும். நூல்களைப் பெறப் பெறத் தொடர்ந்து அடுக்கிவைப்பவர் புத்தகத்தைச் சாலத் தொகுத்தும் பொருள் தெரியாதவர். அந் நூல்களுக்கும், அவருக்கும் என் வகையிலும் நூலகம் என்ற பெயரும், நூலகர் என்ற பெயரும் பொருந்தா. -

இன்னின்ன நூல்களைத் தொகுக்க வேண்டும் என்று உய்த்து அறிவது, உய்த்துத் தொகுப்பது, உய்த்துப் பகுத்து வைப்பது முதலியவற்றால் நூலகம் பொருள் பொருந்திய பெயர் பெற்றதாகலாம்.

முற்காலத்தில் தனியார் தாமே இல்லங்களில் ஏடுகளைத் தொகுத்தனர். தொகுக்கும் வாய்ப்புடையார்பால் பிறர் தம் பாலுள்ள ஏடுகளை வழங்கித் தொகுக்கச் செய்தனர். கோயில் களிலும், அரசர் அரங்குகளிலும், அரசர்கள் புலவர்களைக் கொண்டு இவ்வாறு தொகுத்தனர். சங்க நூல்கள் தோன்றிய வரலாறும், தொகை நூல்கள் அமைந்த வரலாறும் இம்முறையை அறிவிப்பவை. இக்காலத்தில் தொகுக்கும பொறுப்பை அரசும் பொதுமன்றங்களும் மேற்கொண்டுள்ளன. பகுக்கும் கலையும். அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வமைப்புக்கள் நிறைவானாலும் நூலகம் நிறைவுடையதாகாது. நிறைவுடையதாக இருவகைப் புலவர்கள் ஈடுபாடுகொள்ள வேண்டும். அவ்விரு புலவருள் ஒருவர் தேற்றும் புலவர்; மற்றவர் ப்ோற்றும் புலவர்.

நூலகமெல்லாம், அமைந்த நூல்களில் உரியவற்றைத் தேர்ந் தெடுத்து ஆழ்ந்து பயின்று தானும் தெளிவடைந்து பிறருக்கு அறிவித்து அவரையும் தெளிவடையச்செய்பவர் தேற்றும்

புலவர். இவர் நூல்களின் ஆழ்ந்த பொருளை உய்த்து அறிந்த வர். - - -

நூலகர் தொகுப்பதும், வகுப்பதும், பதிவதும் வழங்குவ, தும், பெறுவதும் அமைப்பதும் முதலிய பணிகளோடு நிற்பவரல்

条 . . . .