பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு I 0.7

அரை குறை சொன்னான்: ஒ, உனக்குத் தெரியாது. 虚 இளையவன், பீலிவளை பிறந்த நாளில் குழந்தையின் எதிர் காலத்தைக் கணித்துக் கூறவந்த கணி இப்பெண் குழந்தை எதிர் காலத்தில் பருவம் அடைந்ததும் சோழகுல மன்னன் ஒருவனால் கடப்பட்டு அங்கு தங்காது மீள்வாள்' . என்றான். அதுதான் அப்படியே இப்போது நேர்ந்துள்ளது. எல்லாம் புரிந்த மூன்றாமவன் முடித்துப் பேசினான்: கை சொன்னதால் மட்டும் அப்படியே நிகழ்ந்து விட்டதாக எண்ணக்கூடாது. இந்தச் செய்தி மறைத்து வைக்கப்பட்ட செய்தியன்று. பீலிவளை அறியுமாறும் அவ்வப்போது பேசப்பட்டு வந்ததே. நாளொரு மேனியாய் அவள் வளர்ந்தபோது இந்த எண்ணமும் பொழுதொரு வண்ண மாய் அவளது உள்ளத்தில் வளர்ந்து வந்தது. அந்த உணர்வுக் கொப்பளிப்பு இந்த ஆண்டு இந்திர விழாவிந்து வரவேண்டு மென்றும் துடிப்பை அவளது உள்ளத்தேத் துண்டியது. வந்தும் விட்டாள். நடந்தும் விட்டது. அஃதிருக்கட்டும்; எப்பொழுது அரசிளங்குமரி - இல்லை, இல்லை - அரசி மீள் வாள்? •

தோழி, கைகளை விரித்தாள். ஒருவன் ‘எப்படியாகிலும் தாய்த்தன்மையுடன்தான் வருவாள்' என்று கிண்டலாக ஒர் உண்மையையும் சொல்லி வைத்தான். வரவை எதிர் நோக்கிக் காத்திருந்தார்கள். புகாருக்குள் செல்வதும் அன்றாடக் கடன்களை நிறைவேற்றிக் கொள்வதும் மீளுவதுமாக மாறி மாறி மரக் கலத்திலேயே காத்திருந்தனர். .

ஒரு திங்கள் கழிந்தது ஆணித்திங்களின் தொடக்கத்தில் ஒரு நாள் அந்தி மாலை நேரம். திடீரென்று பீலிவளை விரைந்து ஒடி வந்தாள். மரக் கலத்தில் ஏறத் துடித்தாள். அவ்வாறே ஏற்றினர். மரக்கலம் விரைந்துநாகை நோக்கிவந்தது. இடையே

12. 'ஒருமதி எல்லை கழிப்பிலும், உரையாள்

பொருவரு பூங்கொடி போயின. அந்நாள் மணிமேகலை: 24:42,

12. மணி : 24 : 42, 43