பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Il 4 - வளையல்

எண்ணிப் பீலிவளை அமைதியுற்றிருந்தாள். அவளுக்கும் வளைவர்ைக்கும் இப்பகுதிபால் நற்கருத்துக் கொண்டிருந்த மக்களுக்கும் புகார் நகர் அழிந்தமை பெருங்கவலையாக இருந் தது. குழந்தை பற்றிய செய்தியறிந்த பீலிவளை சாம்பினான். குழந்தை உயிரோடிருக்கும் என்ற நம்பிக்கையில் ஐயத்தையே புகவிடாத அவள் இப்பதிக்கு ஒரு குழுவை அனுப்பினாள்.

நாக நாட்டார் கலங்களில் வந்து குழந்தை பற்றி உசாவி அறிந்தனர். காலப் போக்கில் குழந்தையைப் பற்றிய ஏதோ செய்தி அறிந்தவர் போலப் பலர் இங்கே நிலைத்துத் தங்கினர்.

புகாருக்குப்பின் 岛事5@岳

புகாரின் அழிவிற்குப் பின்னர் புத்த மதத்தார் இங்கு பல் கினர். மக்கட் கூட்டமும் வந்திறங்கிப் பெருகிற்று. ஒரு நகராக உருவெடுக்கும் அடிப்படைகள் அமைந்தன. அக்காலத்தும் இப் பகுதி ஓர் ஊர்ப்பெயராக வழங்கப்படாமல் ஒரு பகுதிப் பெய. ராகிய படரி திட்ட' என்னும் பெயராலேயே வழங்கப்பட்டு வந்தது.*

கரையோரத் தோப்புகளில் நாக நாட்டாரின் குடியிருப் புகள் பெருகின. எங்கோ வளர்ந்த திரையனைக் காக்க வந்த நாகர்கள் இங்கு நிலைத்தனர். புகார் வணிகத் துறையாக இருந்தக்கால் வணிகங் கருதி வந்த வெளிநாட்டார் இப்பகுதி மேல் கவனங் கொண்டனர். வேறு அமைப்பான துறையும் இல்லை. சோழ நாட்டுப் பகுதிக்கு வரும் உலகோர்க்கு இப் பகுதியே துறைமுகமாயிற்று. கலங்கள் வந்து நின்றன. வணிகம் பிடித்தது. உள் நாட்டு மக்களும் வந்து குழுமத் தொடங்கினர்.

இஃதுடன் இது நிற்பதாக, இடையே சோழ மன்னர் நெடு முடிக்கிள்ளி பற்றிய செய்தியை அறிவோம். அதனால் மற்றொரு அடிப்படையை அறியலாம். . . . . ஆண்டுகள் ஓடின. இடைக் காலத்தில் எங்கோ வளர்ந்த திரையன் நாகர்களால் வெளிப்படுத்தப்பட்டான். குழந்தையாய்

>k * - 3 ..سسٹم۔- -

"ஆசார்ய தன்மபாலதேரோ லிறென திடஸ்வ சமீபே டபிளாரட்டே

படரதித்தமிறெ’’

- பாவிமொழியில்