பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு 115

வந்தாக்கால் கையில் அணியப்பட்டிருந்த தொண்டைக் கொடி

அவன் நாக நாட்டு மகன் என்பதற்கு ஒரு குறியாய்க் கொள்ளப் பட்டது. .

நாளடைவில் இச் செய்தி நெடுமுடிக் கிள்ளிக்கு அறிவிக்கப் பட்டது. எதிர்பாராத செய்தியாம் இதனைக் கேட்ட மன்னன வியந்து பூரித்தான். இச் செய்தியில் மிக்க கருத்துான்றிய மன்னன் உரிய முயற்சி செய்து தனது அருமருந்தன்ன மகனை அடைந்தான்; செம்மாந்தான்.

புகார் நகரின் அழிவிற்குப் பின்னர் முடிமன்னன் நெடுமுடிக் கிள்ளி உறையூர்க்குச் சென்றான் என்று அறிந்தோம். அதற்கு முன்னரே உறையூர் மேம்பட்ட ஊராகவும் சோழத் தலைநக ராகவும் திகழ்ந்தது, புகார் நிகழ்ச்சிக்குப் பின்னர் அவனது தாயத்தாரிடத்தே பலவகைக் கருத்துக்கள் கிளைத்தன. நெடு முடிக் கிள்ளிக்குப் பின்னர் அரசுரிமை பற்றியக் கருத்துச்சூழல் சிக்கலாகவும் கலவரமாகவும் மாறியது.

ஆவூர் அரணிலும் மனையிலும் இடம் பெற்றிருந்த சோழி குலத் தாயத்தார் இது பற்றி ஆழ்ந்து சிந்தித்தனர். புகார் வள மாக இருந்த போதே காஞ்சிபுரத்தில் நெடுமுடிக்கிள்ளியால் ஆளுநராக அமைக்கப்பட்டிருந்த தொடுகழற்கிள்ளி தனது இள வல் இளங்கிள்ளியோடு ஆண்டான். அங்கும் புத்தம் இடம் பெற் றிருந்தது. இளங்கிள்ளி புத்தக் கோட்டம் அமைத்ததுடன் மணி பல்லவத் தீவுச் சோலை போன்றே ஓரிடத்தைச் செப்பனிட்டு அமைத்து அங்குள்ள புத்த பீடிகை போன்ற ஒன்றையும் அமைத் தான். அதுபோது காஞ்சிநகர் கொடிய வற்கடமாம் பஞ்சத்தில் அடிபட்டுப் புல்லென்றது".

பூம்புகாரின் அழிவின்போது வெளி நாட்டிலிருந்து மணி மேகலை மீண்டுவந்து நிலையறிந்தாள். வருந்தியவள் பல இடங் களுக்கும் சென்று இறுதியில் காஞ்சியை அடைந்தாள். தனது அறத்தால் அந்நகரில் வற்கடம் தீர உதவினாள். அங்கேயே தங்கிப் பவத்திறம் அறுக' என நோற்றாள்.

£ 1, u of : 88 : ì ຂໍ້ 6 - 7 7 5