4 புதையலும்
கோடுயர் பிறங்கள் மலைகிழவோன்' -நற்றினை “செம்மலையாகிய மலைகிழவோன்' -கலித்தொகை “மையாடு சென்னிய மலை கிழவோன்'
- அகநானூறு
"தீயேன் தில்ல மலை கிழவோற்கே' -ஐங்குறுநூறு மேலுள்ள அடிகள் அகப்பொருள் இலக்கிய அடிகள். அகப் பொருள் தலைவனை கிழான்-கிழவோன்' என்கின்றன. மேலே காட்டப்பெற்ற பலவற்றிலும் இக்கிழவன் மலை நாட்டோடு தொடர்புடையவனாக உள்ளமை கருதத் தக்கது.
இவ்வகையில் மலைநாட்டில் தோன்றி மலைநாட்டு மக்களோடு வாழ்ந்து அவர்தம் தலைவனாக விளங்கிய முருகன் கிழவன் ஆனான்.
'விண்பொரு நெடுவரை குறிஞ்சிக் கிழவ"1" பழமுதிர் சோலை மலை கிழவோயே 19
'நிலைபெறு தணிகை மலை கிழவோயே" - என இலக் கியங்கள் போற்றுகின்றன. அதனிலும் மேலாகக் குறிஞ்சிக் கிழான் என்னும் தொடர் அவனுக்கே உரியதாயிற்று.
இதே நோக்கில் - குறிஞ்சிக் கிழான் என்னுஞ் சொல் நோக்கில் மற்றொன்றையும் காண இடம் உண்டாகின்றது. 'குறிஞ்சிக் கிழான்' என்பது போன்று பிற நிலத்துத் தெய்வங் கள், முல்லைக் கிழான், மருதக் கிழான், நெய்தற்கிழான், பாலைக் கிழான் எனத் தெய்வ நோக்கில் குறிக்கப்படவில்லை. இது மலைநிலத்தவனாகிய முருகனுக்கு அமைந்த தனித்தன்மை யாகின்றது.
11, நற் : 28 - 9
1 ? . கவி : 0 - 34
يع j مسس 8 0 } : شات عنه ، كي i
14. ஐங்குறு : 204 - 5
15. முருகு : 299
I 6, 爱多 : 3. 1 7 17 . தணிகை : 417 - 4