8 புதையலும்
வீரத்திற்கு உவமமாக:
'காரலர் கடம்பன் அல்லன் என்பது ஆரங் கண்ணியிற் சாற்றினன் வருவோன்' ' "வள்ளல் (சீவகன்) மாத்தடிந்தான் அன்ன மாண்பி
- r = * 26
55TFrār
சான்றாக மேலே காட்டப்பட்ட நூல்களின் பெயர்களை ஒருமுறை நோக்கினால் அவை யாவும் புத்த, சமண, மதத்தவை என்பதை அறியலாம். வேற்று மதநூல்களும் போற்றும் பாங்கை நோக்கினால் முருகன் பொதுவில் யாவராலும் போற்றப்படும் நிலையில் திகழ்ந்ததை உணரலாம். அப்பாங்கு தமிழ்த் தெய்வம்' என்னும் பாங்காகவே அமைகின்றது. வடமொழி, மற்றைய மொழி நூல்களில் இவ்வாறு முருகன் போற்றிக் குறிக்கப்படா மையும் முருகன் தமிழ் நாட்டுத் தெய்வம்: தமிழர்தம் தனித் தெய்வம் என்பதற்குச் சான்றாகின்றது.
ஒரு மறைப்பு.
முருகன், தமிழ்த் தெய்வம்' என்பதில் மறுப்பில்லை. ஆனால், ஒரு மறைப்பு உண்டு. அது வடமொழியாளர் செய் துள்ள மறைப்பு.
'தமிழ் ஒரு மூல மொழியன்று:தமிழ் நூல்கள் யாவும் வடமொழி மூலத்தைக் கொண்டவை; தமிழ் இனத்தார் மரபுகள் தாழ்வானவை'-என்பன வடமொழியாளர் திட்டமிட்டுப் பரப்பிய கருத்துக்கள். இக்கருத்துக்களுக்கேற்பக் கதைகள் கட்டியும், பையப் பைய. ஆனால், வலுவாகவும் செயற்பட்டனர். தமிழ ராகப் பிறந்து வடமொழி வருடிகளாக வயிறு கழுவியோர் இக்கருத்துக்களுக்குப் பக்கமேளங் கொட்டினர். இவர்களால் குலைந்த தமிழ் மரபுகள் பல. அவற்றுள் ஒன்று தமிழ் முருக னைப் பற்றிக் கட்டப்பட்ட கதைகள். மற்றொன்று புனைந்த கோட்பாடுகள். தம் எண்ணம் செயற்பட வடமொழியாளர் கொண்ட கருவி மொழிமாற்றம்.
25. மணி பளிக்கறை : 48, 50, 26. இவசித் : 1029